Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழனிடம் பணம் பெறும் போது மட்டும் தமிழ் மொழி இனிக்கிறது . தமிழனுக்கு சேவை  செய்யும் போது மட்டும் தமிழ் மொழி கசக்கிறது - இந்திய அரசின் கயமை விளம்பரம்.

இன்று வெளியாகியுள்ள இந்திய அரசின் வருமான வரித்துறை விளம்பரம் தமிழில் வெளிவந்துள்ளது. இந்த விளம்பரம் தமிழக மக்கள் வரி செலுத்த வேண்டும் என்று எச்சரிப்பதற்காக கொடுக்கப்பட்ட விளம்பரம் ஆகும். தமிழர்களிடம் பணம் பறிக்க வேண்டும் என்றால் தமிழ் மொழியில் விளம்பரம் செய்யும் இந்தி அரசு , அதே தமிழர்களுக்கான சேவை வழங்குவதில் மட்டும் தமிழ் மொழிக்கு பதிலாக இந்தியை திணிக்கிறது. வங்கிகள், வருமான வரி சேவைகள், தொடர்வண்டி, வானூர்தி சேவை, அஞ்சல் சேவை , ராணுவம், கடவுச்சீட்டு, துறைமுக சேவை, வாழ்நாள் காப்பீடு , சமையல் எரிவாயு, பெட்ரோல் நிறுவனங்கள்,  நடுவண் அரசின் அலுவலகங்கள் எவற்றிலும் தமிழ் மொழியை பயன்படுத்துவது இல்லை இந்திய அரசு.

பணம் பெறுவதற்கும், தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்கும் தமிழ் மொழியை பயன்படுத்தும் இந்திய அரசு ஏன் தமிழர்களுக்கு வழங்கக் கூடிய சேவைகளை தமிழில் வழங்குவதில்லை. ஏன் நடுவண் அரசு பணிகளில் தமிழர்களை வேலைக்கு அமர்த்துவதில்லை? ஏன் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்காமல் எல்லா இடங்களிலும் இந்தியை திணிக்கிறது இந்திய அரசு ? இந்தக் கேள்விகளை எல்லாம் எப்போதும் நாம் இந்திய செவிப்பறைகளில் பலமாக அடிக்கிறோமா அப்போது தான் நம் மொழிக்கும் இனத்திற்கும் விடுதலை கிடைக்கும் . அது வரை இந்தியர்கள் தமிழர்களை அடிமைகளாகவே வைத்திருப்பார்கள் . 
[vuukle-powerbar-top]

Recent Post