Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தனிமனித தாக்குதல் நடத்தும் திராவிடர்களின் கவனத்திற்கு !

திராவிடத்தை எதிர்த்தால்  திராவிட மதவாதிகளான பெரியார் பக்தர்கள் தனி மனித தாக்குதலில் ஈடுபடுகின்றனர். ஆரியத்தை எதிர்த்த போதும் ஆரிய மதவாதிகள் இதே போன்ற தனிமனித தாக்குதலில் தான் ஈடுபட்டனர். ஆரியனும் திராவிடனும் தமிழர்களை தாக்குவதில் ஒரே நேர்கோட்டில் தான் பயணிக்கின்றனர். கருத்தை கருத்தியல் ரீதியாக மோதுவதை விட்டுவிட்டு தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதால் ஒருபயனும் இல்லை .

தமிழினத்தை இன்று வரை இழிவு செய்து கொண்டிருக்கும் திராவிடத் தலைமைகளை நாம் தனிமனித தாக்குதல் நடத்தவில்லை. மாறாக அவர்களின் கருத்துக்களுக்கு மட்டுமே எதிர்வினை ஆற்றினோம். திராவிட மதத்தினர் அவர்களின் தோல்வியை ஒப்புக் கொள்ள மனமில்லாமல் திராவிடத்தை எதிர்க்கும் நபர்களின் குடும்பங்களை இழுத்து தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது கீழ்த்தரமான செயல். திராவிடத் மதத்தின் கடவுளான திராவிடத் தந்தையின் கேவலமான சொந்த வாழ்கையை கூட நாம் இதுவரை விமர்சனம் செய்யவில்லை. காரணம் அது நம் நோக்கமல்ல. ஆனால் தொடர்ந்து தமிழினத்தின் மேல் பகையை உமிழும் வகையில் தமிழர்களின் மீது தனிமனித தாக்குதல் நடத்தினால் நாம் திராவிடக் கடவுளின் தனிமனித வாழ்கையை பற்றியான உண்மைகளை பேச வேண்டி வரும். அந்த நிலையை திராவிட மதத்தினர் உருவாக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் தனி ஒரு நபரை தாக்குவதால் திராவிடத்தை தூக்கி நிறுத்திவிடலாம் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள். திராவிட எதிர்ப்பு என்பது ஒரு சில தமிழர்களால் மட்டும் முன்னெடுக்கப்படுவது இல்லை. இப்போது தமிழர்கள், தமிழ் அமைப்புகள், தமிழ்க்கட்சிகள் பலரும் திராவிடத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். திராவிடக் கருத்தியலை தமிழ் மண்ணில் இருந்து அகற்றும் வரை திராவிட எதிர்ப்பு தமிழர்களால் இங்கு முன்னெடுக்கப்படும். அதனால் தனிமனித தாக்குதலில் நேரத்தை செலவிடாமல் இருக்கும் கொஞ்சநஞ்ச திராவிட இருப்பை தக்கவைக்க உருப்படியான சில வேலையை திராவிடர்கள் பார்ப்பது நல்லது.





[vuukle-powerbar-top]

Recent Post