Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து தேர்தல் ஆணையத்தின் முரண்பட்ட பதில் ! 

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கக் கூடாது என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளது. அதற்கு தேர்தல் ஆணையம் கொடுத்த பதிலை நமக்கு அனுப்பியுள்ளது . ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது ஒரு வாக்காளர் சேர்க்கை ஒழுங்கு படுத்தும் நடவடிக்கை என்றும்  இதனால் வாக்காளிகும் உரிமை யாருக்கும் மறுக்கப் படாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் அட்டை இல்லாதவரும் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று கூறியுள்ளது தேர்தல் ஆணையம். 

இது உண்மையெனில் ஏன் தேர்தல் ஆணையம் வீடு வீடாக சென்று மக்களிடம் ஆதார் எண்ணை பெறுவதற்கு முயற்சி செய்கிறது என்று தெரியவில்லை. மேலும் இணையத்தில் வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம் என்று கூறி வருகிறது தேர்தல் ஆணையம். வாக்களிப்பதற்கும் ஆதார் எண்ணை கட்டாயப் படுத்துவதற்கும் என்ன தொடர்பு ? 

இன்னொரு கேலிக் கூத்து என்னவெனில் , பல மாநிலங்களில் மக்கள் தொகையை  காட்டிலும் ஆதார் அட்டை அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. தில்லியின் மக்கள் தொகையை காட்டிலும் 25 % அதிகமாக ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது . இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது . இப்படி அரசே மக்கள் தொகையை காட்டிலும் அதிகமாக ஆதார் அட்டை வழங்கினால் , அதிகமான மக்களுக்கு அரசின் உதவித் தொகை சென்றதாக யாரும் கணக்கு காட்டிவிட முடியும் . மேலும் நாளை ஆதார் எண்ணை கொண்டு வாக்களிக்கும் நிலைமையை தேர்தல் ஆணையம் கொண்டு வந்தால் கணக்கில் இல்லாத அளவிற்கு அதிகமான மக்கள் வாக்களிக்க கூடும் . இதன் மூலம் குறிப்பிட்ட அரசு தானே எல்லா வாக்குகளையும் பெற்றதாகி விடும். 

இப்படியான முரண்பாடுகளை கலையவும் , வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் என்னை இணைக்காமல் இருக்கவும் ஆதார் எண்ணை எந்த சேவைக்கும் அரசு கட்டாயப் படுத்தக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் நிலைப்பாடாக உள்ளது . மக்கள் அனைவரும் இப்படியான முரண்பாடுகளை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். 

ஆதார் அட்டையை எந்த சேவைக்கும் கட்டாயப் படுத்தக் கூடாது என்ற போராட்டம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரும் 04/04/2015 சனி அன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னெடுக்கிறது. மனித உரிமை ஆர்வலர்கள் , சமூக செயல்பாட்டாளர்கள் அவசியம் கலந்து கொள்ளவும் .
தொடர்புக்கு 9566224027 
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை சேர்ப்பது கட்டாயமில்லை 
ஆதார் அட்டை குளறுபடிகள் ! 



[vuukle-powerbar-top]

Recent Post