Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூகிள் தானியங்கி தேடல் இந்திய வரைபடம் ! தமிழகம் இந்திக்கு எதிரான மாநிலம் என்பதே மக்களின் தேடல் !

கூகிள் தேடல் இணையத்தில் சென்று நாம் சில சொற்களை முதன்மையாக வைத்து தகவல்களை தேடுவோம். இந்த வகையில் 'Why is Tamil Nadu' (ஏன் தமிழ் நாடு ) என்று கூகிள் இணையத்தில் தேடினால் கூகிள் உடனே பரிந்துரை செய்வது 'against hindi' (இந்திக்கு எதிராக உள்ளது) என்ற வாசகத்தைத் தான்.

அதாவது அதிக மக்கள் ஏன் தமிழ்நாடு இந்திக்கு எதிராக உள்ளது என்ற தகவலை தேடுகிறார்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது. கேரளாவை பற்றி தேடும் போது 'Gods owns country' ( இது கடவுளின் தேசம்) என்ற பரிந்துரை தான் கூகிள் தானாகவே முன்வந்து கொடுக்கிறது.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்தி பேசும் மாநிலமான மத்திய பிரதேசம் குறித்த தேடலில் 'POOR' (ஏழை மாநிலம்) என்ற தேடல் தகவலை கொடுக்கிறது கூகிள். இன்னொரு இந்தி மாநிலமான பீகார் மாநிலத்திற்கு பின்தங்கிய மாநிலம் என்ற பரிந்துரையை கொடுக்கிறது கூகிள் தேடல்.

இதன் மூலம் இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே இந்திய அரசின் அராஜக இந்தித் திணிப்பு மொழிக் கொள்கையை எதிர்க்கிறது என்ற செய்தியை இந்திய மக்கள் அனைவரும் அறியும்படி செய்துள்ளது கூகிள் தேடல் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழி ஆட்சி மொழியாகும் வரை, அனைத்து மாநில மொழிகளுக்கும் சம உரிமை கிடைக்கும் வரை தமிழகம் தொடர்ந்து இந்தித் திணிப்புக்கு எதிராக போராடும் என்பதை இந்திய மக்கள் நிச்சயம் இணையத்தின் வாயிலாக உணர்ந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

இன்னொரு சுவையான தவகல் 'why tamils are' ( ஏன் தமிழர்கள் ) என்று கூகிளில் தேடினால் 'intelligent' ( புத்திசாலிகள்) என்ற தானியங்கி தேடல் பரிந்துரையை கூகிள் வழங்குகிறது என்பது தமிழர்களுக்கு பெருமையே.

[vuukle-powerbar-top]

Recent Post