Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

குடியாட்சின் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமைக்கு கூட ஆதார் அட்டை தேவை என்ற நிலை உருவாகிறது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய அரசு தொடங்கியுள்ளது தனிமனிதனின் அடிப்படை உரிமை மீறலாகும். தனிமனித விவரங்களை ஆதார் அட்டையுடன் சேர்க்கும் பணியை சிறப்பாக செய்து முடித்துள்ள நடுவண் அரசு இப்பொது வாக்களிக்கும் உரிமையை பெறுவதற்கு கூட ஆதார் அட்டை தேவை என்ற நிலையை உருவாக்க முயல்கிறது. ஏற்கனவே சமையல் எரிவாயு, வங்கிக் கணக்கு, கடவுச் சீட்டு , தொடர்வண்டி முன்பதிவு போன்றவற்றிக்கு ஆதார் எண்ணை கேட்கிறது அரசு. இந்த ஆதார் அட்டையுடன் ஒவ்வொரு தனிமனித கண்ரேகை, கைரேகை , வங்கிக்கணக்கு , தொலைபேசி இணைப்பு, அலைபேசி இணைப்பு, கடன் அட்டை, மின்னஞ்சல் முகவரி  என அனைத்தையும் இணைத்து வருகிறது நடுவண் அரசு. ஏற்கனவே தனிமனிதனின் சுதந்திரம் பறிபோன நிலையில் இப்போது ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது தனிமனிதனின் அடிப்படை உரிமை மீறலாகும். எந்த ஒரு தனியார் நிறுவனமும் இனி ஆதார் அட்டையின் எண்ணை கொண்டு தனிநபரின் விவரங்களை பெறலாம் . தனிமனிதனின் வங்கி இருப்பு, கடன் நிலுவை, அலைபேசி எண் போன்ற தகவலை எளிதில் பெறலாம். தனிமனித சுதந்திரம் என்பது இனி இல்லாத உருவாகும் ஆபத்து அனைத்து மக்களுக்கும் வருவது உறுதியாகி உள்ளது .

இதில் கவலைப் படவேண்டிய விடயம் என்னவெனில் இப்படியான ஆதார் அட்டையின் முறைகேடான பயன்பாட்டை குறித்து எந்த அரசியல் கட்சிகளும் பேசவில்லை என்பது தான் . தனிநபர் சுதந்திரம் பறிபோனது பற்றி யாரும் கவலைப் பட்டதாகவும் தெரியவில்லை . இந்திய அரசை எதிர்த்து ஒரு கண்டனக் குரல் கூட எழவில்லை . ஒரு சில மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமே ஆதார் அட்டையை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மாநில சுயாட்சி உரிமைகள் கூட பறிபோகும் நிலையை ஆதார் அட்டை உருவாக்கி வருகிறது . ஆனால் தமிழக அரசு இதை உணராமல் இந்திய அரசுக்கு துணை போவது வேதனை. வாக்களிக்கும் உரிமையில் கூட ஆதார் அட்டை வேண்டும் என்று கூறும் நடுவண் அரசுக்கு அரசியல் கட்சிகள் கண்டங்களை இனியாவது தெரிவிக்க வேண்டும் என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.




[vuukle-powerbar-top]

Recent Post