Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை நாடாளுமன்றத்தில் மோடியின் பேச்சு - தமிழர்களுக்கு ஏமாற்றம் !

தமிழீழ மக்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் மோடி ஏதாவது வகையில் நன்மை செய்வார் என்று எதிர்ப்பார்த்திருந்த உலகத் தமிழர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

தீவிரவாதத்தை இலங்கை அரசு வெற்றிகரமாக இலங்கை அரசு எதிர்கொண்டது என்று தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் போரை நியாயப் படுத்தியுள்ளார் மோடி . அங்கு ஒரு இனப்படுகொலை நடைபெற்று தமிழர்களுக்கு எந்த ஒரு தீர்வும் எட்டப்படாத நிலையில் , மோடி நேராக தமிழீழ மண்ணுக்கு சென்று அங்குள்ள தமிழர்களை சந்தித்து விட்டு நாடாளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டும். மேலும் தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலை குறித்தோ, போர்குற்றங்கள் குறித்தோ அல்லது குறைந்தபட்சம் மனித உரிமை மீறல் குறித்தோ கூட மோடி பேசவில்லை. தமிழர்களுக்கு 13 வது சட்டத்தை நடைமுறைப்படுத்தி அல்லது அதற்கு மேலும் சென்று இலங்கை அரசு தமிழர் சிக்கலில் தீர்வு காண வேண்டும் என்று சொன்னதையே சொல்லி வந்துள்ளார் மோடி. 

தமிழின அழிப்பை பற்றி எந்த கவலையும் படாமல் உலகத் தமிழர்களின் கோரிக்கைகளை காதில் வாங்கிப் போட்டுக்  கொள்ளாமல் , ஏற்கனவே காங்கிரஸ் அரசு எடுத்த அதே  நிலைப்பாட்டை தான் மோடி அரசும் எடுத்துள்ளது . இதில் எந்த வேறுபாடும் இல்லை. மேலும் இலங்கையுடன் வணிக நட்புறவு, கட்டமைப்பு சார்ந்த ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு வந்துள்ளார் மோடி. உச்சகட்டமாக தமிழர்களை அவமானப் படுத்தும் விதமாக குஜராத்தில் சிங்கள் மக்களுக்காக பௌத்த கோவிலை நிறுவ வேண்டும் என்று கூறியுள்ளார் மோடி. இரு நாடுகளும் பண்பாட்டு ரீதியாக நீண்ட கால நண்பர்கள் என்று கூறியுள்ளார். எந்தப் பண்பாட்டு ரீதியில் என்று மோடி விளக்க வேண்டும் . தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும்  இடையே உள்ள  பல ஆயிரம் ஆண்டுகள் இனமுரண்  வரலாற்றை பற்றி மோடி அறிந்திருக்க வில்லை என்றே தெரிகிறது. தமிழர்கள் வரலாறு இல்லாத இனத்தை போல பாவிக்கிறார் மோடி .

இந்தியாவில் இந்து மதவாதத்தை ஆதரிக்கும் மோடி இலங்கையில் சிங்கள பௌத்த மதவாதத்திற்கு தலைவணங்கி வந்துள்ளார் என்பதை தவிர மோடியின் இலங்கை பயணம் ஒன்றும் சாதிக்கவில்லை. இப்பயணம் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயனில்லை. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கூட தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கை அரசை நேரடியாக கண்டித்தார். ஆனால் மோடியோ இலங்கை அரசை செல்லமாக வருடித் கொடுத்துள்ளார். 


[vuukle-powerbar-top]

Recent Post