Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பொதுமக்களுக்கு இன்று கிடைத்த நற்செய்தி!  

அரசோ, தனியார் நிறுவனங்களோ ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற மீண்டும் உறுதி செய்துள்ளது. 

ஆதார் அட்டையை எந்த விதமான அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டயாப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் சட்டத்திற்கு விரோதமாக ஆதார் எண்ணை எல்லா சேவைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்று நடுவண் அரசும், மாநில அரசும் மக்களை கட்டாயப் படுத்தி வருகின்றன. இதன் உச்ச கட்டமாக பொதுமக்கள் வாக்கு செலுத்தக் கூட ஆதார் எண்ணை கட்டாயப் படுத்தியுள்ளது தேர்தல் ஆணையம். இது மிகப்பெரிய மக்கள் விரோத செயலாகும். ஆதார் அட்டையிலேயே  ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்று அல்ல என்று குறிப்பிடப் பட்டுள்ளது . ஆனால் அதை ஒரு குடியுரிமை சீட்டை போல பயன்படுத்த முனைகிறது இந்திய அரசு . இதை எதிர்த்து விரைவில் நாம் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் நடவடிக்கையை உடனே கைவிடவேண்டும் . எந்த சேவைக்கும் ஆதார் எண்ணை கேட்கக் கூடாது என்றும் நாம் போராட்டம் நடத்த உள்ளோம் . 

இந்நிலையில் இப்போது ஆதார் அட்டையை கட்டாயப்படுத்துவது கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் .  
[vuukle-powerbar-top]

Recent Post