Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர்களுக்கு துரோகம் இழைத்த இந்தியா இப்போது இந்தியர்களுக்கும் துரோகம் இழைத்துள்ளது.

ஆம் ,  'இந்தியாவின் மகள்' பி.பி.சி ஆவணப் படத்தை தடை செய்ததின் மூலம் இந்தியர்களுக்கு பெரும் துரோகம் இழைத்துள்ளது இந்திய அரசு. அண்மையில் பி.பி.சி உலகத் தொலைக்காட்சியில் டெல்லி மாணவி ஜோதி கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை ஒரு ஆவணப் படமாகவே வெளியிட்டனர். இப்படத்தில் வன்புணர்வில் ஈடுபட்ட கொலைகாரர்களையும், ஜோதியின் பெற்றோர்கள் நண்பர்களிடமும் பேட்டி எடுத்துள்ளனர் பி.பி.சி ஊடகம். இப்படத்தை பார்க்கும் இந்தியர்கள் அனைவருக்கும் நிச்சயம் கண்களின் கண்ணீர் வரவழைக்கும். தமிழர்களுக்கு இப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது . காரணம் ஈழத்தில் இந்திய அரசும் சிங்கள அரசும் இணைந்து நடத்திய இனப்படுகொலையில் பல்லாயிரம் தமிழ்ப் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இனப்படுகொலை காட்சிகள் சேனல் 4 நிறுவனம் வெளியிட்ட போது அக்காட்சிகள் யாவும் உலகத் தமிழர்களை உலுக்கியது. ஆனால் இந்தியர்கள் மீதோ  இந்திய அரசின் மீதோ எந்தவித தாக்கத்தையும் அக்காட்சிகள் ஏற்படுத்தவில்லை.  சேனல் 4 தொலைக்காட்சி  இனப்படுகொலை காட்சியை வெளியிட்ட  பிறகும் இந்திய அரசு சிங்கள அரசுக்கு பல்வேறு உதவிகள் செய்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது. உலக அரங்கில் இலங்கையை பாதுகாக்க எல்லா முயற்சிகளையும் எடுத்தது இந்திய அரசு.

இது ஒரு புறம் இருக்க , இந்தியாவில் இந்திய ராணுவத்தால் நடைபெறும் வன்புணர்வுகள், போர்குற்றங்கள் தொடர்பான எந்த செய்திகளையும் இந்திய அரசு வெளிவராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. மணிபூர் மங்கை இரோம் சர்மிளாவின்  போராட்டத்திற்கு எந்த வகையிலும் இந்திய அரசோ இந்தியர்களோ ஆதரவு தருவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.  மத்திய இந்தியாவில் இந்திய இராணுவம் பழங்குடி மக்களின் மீது நடத்தும் வன்முறை செய்தியும் எந்த ஊடகத்திலும் வருவதில்லை. இந்நிலையில் தான் டெல்லி மாணவி வன்புணர்வு கொலை நிகழ்ச்சி மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது . சென்னையில் எதற்கும் போராட வராத நடிகைகள் ஜோதியின் கொலைக்காக வீதியில் வந்து போராட்டம் நடத்தினர் . அந்த அளவிற்கு ஊடகங்கள் ஜோதியின் செய்தியை ஒளிப்பரப்பினர். இருப்பினும் ஜோதியின் மரணம் குறித்த முழுமையான தகவலை எந்த ஊடகமும் தரவில்லை. இருப்பினும் பிபிசி தொலைக்காட்சி துணிச்சலாக ஜோதியின் வன்புணர்வு மற்றும் கொலையின் பின்னணியில் உள்ள பல தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது . இப்படத்தை பார்த்தால் இந்தியர்கள் ஒவ்வொருவரும் இந்தியாவில் பெண்களுக்கு இருக்கும் சுதந்திரம் என்ன , ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரம் , இந்த சமூகம் பெண்களை எப்படி நடத்துகிறது போன்ற உண்மைகளை தெரிந்து கொள்வர். அப்படியான உண்மையை அனைவரும் நிச்சயம் தெரிந்து கொள்ளத் தான் வேண்டும். ஆனால் இந்திய அரசோ இந்த ஆவணப்படத்தை தடை செய்து விட்டது. இருப்பினும் தடையை மீறி இணைய தளத்தில் இப்படம் இன்னும் உலா வந்து கொண்டிருக்கிறது.

இப்படத்தை இந்திய அரசு தடை செய்வதின் மூலம் இந்திய அரசு தமிழர்களுக்கு மட்டும் துரோகம் செய்யும் அரசு இல்லை , இந்தியர்களுக்கும் துரோகம் செய்யும் அரசு என்பதை உறுதி செய்துள்ளது.












[vuukle-powerbar-top]

Recent Post