Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நம் இல்லத்திற்கு வந்த தொலைக்காட்சி நிறுவனம் !

தூய தமிழில் நாம் ஏன் பேசவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக சாலினி தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியை உருவாக்குகிறது. சாலினி தொலைக்காட்சி மக்களிடையே பெரிதும் அறியப்படாத தொலைக்காட்சி ஊடகமாக இருந்தாலும் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் ஆதரவாக பல நல்ல நிகழ்ச்சியை வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஜெயதேவன் என்பவர் நல்ல தமிழ் உணர்வாளர். இவரது குழந்தைகள் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படிக்கிறார்கள் என்ற செய்தியை நாம் ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். ஜெயதேவன் இப்போது தூய தமிழில் நாம் பேசுவதால்  என்னென்ன நன்மைகள் , தமிழில் பேசாமல் ஆங்கிலம் கலந்து கலந்து பேசுவதால் என்னென்ன தீமைகள் நம் மொழிக்கும் இனத்திற்கும் ஏற்படுகிறது என்ற செய்தியை நம்மிடம் பதிவு செய்தார். இந்த செய்தியுடன்  தமிழ் மொழியை தமிழர் இல்லங்களில் பயன்படுத்த வலியுறுத்தும் குறும்படத்தையும் சாலினி தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது.

சிறிய ஊடகமாக இருந்தாலும் சாலினி  தொலைக்காட்சி நிறுவனம் தூய தமிழின்  பயன்பாட்டை ஊக்குவிக்கும் நிகழ்சிகளை ஒளிபரப்ப முன்வந்திருப்பது வரவேற்கப்பட வேண்டியது. பெரிய ஊடகங்கள் எப்போது தமிழை சிதைக்காமல் தூய தமிழ்ச் சொற்களை ஊக்குவிக்கிறதோ அப்போது தமிழகத்தில் உள்ள அனைவரும் மொழி விழிப்புணர்வு பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை, தற்போது தமிழ்த் தொலைகாட்சிகளில் மக்கள் தொலைக்காட்சி மட்டுமே தூய தமிழ்ச் சொற்களை பயன்படுத்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த நிகழ்ச்சியை உருவாக்கும் சாலினி தொலைகாட்சிக்கும் நண்பர் ஜெயதேவன் அவர்களுக்கும்  நம் பாராட்டுகள்.





[vuukle-powerbar-top]

Recent Post