Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வேலூரில் கவலைக்கிடமான நிலையில் தமிழ் மொழி ! எங்கும் இந்தியும்   வங்காளமும் ஆளுமை செலுத்துகிறது !

உலகப் புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி.  மருத்துவமனைக்கு இந்தியாவின் பல பகுதியில் இருந்து மக்கள் குவிகிறார்கள். குறிப்பாக வங்காள தேசத்தில் இருந்து பெருமளவில் மக்கள் வேலூருக்கு வருகிறார்கள். இதனால் வேலூர் வணிகர்கள் வங்காளிகளை ஈர்ப்பதற்கு  வங்காள மொழியில் கடையின் பெயர்ப்பலகைகள் வைத்தனர். பிறகு இந்தியர்களை ஈர்பதற்கு இந்தி மொழியிலும் கடையின் பெயர்ப் பலகைகள் வைக்கலாயினர், இந்தியிலும் வங்காளத்திலும் பெயர்ப் பலகை வைத்த வணிகர்கள் இறுதியில் மண்ணின் மொழியான தமிழ் மொழியை இப்போது முற்றிலும் புறக்கணித்துள்ளனர் என்பது தான் வேதனையான செய்தி. தமிழ் ஆர்வலரான ராம் என்ற நபர் இந்த கடைகளுக்கு சென்று தனி ஆளாக கடை உரிமையாளர்களுக்கு தமிழில் பெயர் வைக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். தமிழில் பெயர்ப் பலகை வைப்பது கட்டாயம் என்றும் கூறியுள்ளார் . ஆனால் இவர் சொல்வதை வணிகர்கள் யாரும் மதிப்பதாக தெரியவில்லை என்று ராம் கவலைத் தெரிவித்துள்ளார் .

இப்படங்களை பார்த்தாலே நமக்கு எளிதில் புரியும். வேலூரில் எந்த அளவிற்கு தமிழ் மொழி மறைந்துள்ளது , எந்த அளவிற்கு இந்தியும் வங்காள மொழியும் வேரூன்றி உள்ளது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இது தமிழகமா அல்லது வடநாடா என்று ஐயம் கொள்ளும் வகையில் உள்ளது வேலூரின் நிலை.

இந்த நிலையை மாற்ற வேண்டிய பொறுப்பு வேலூர் மாவட்ட அரசு நிர்வாகத்திற்கு உள்ளது . வேலூர் மாவட்ட நகராட்சி அதிகாரிகள் உடனே இக்கடைகளுக்கு சென்று தமிழில் பெரிதாக பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்று வணிகர்களை வலியுறுத்த வேண்டும். பெயர்ப் பலகை தமிழில் மாற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். வேலூரில் செயல்படும் தமிழ் அமைப்புகள் , கட்சிகளும் இந்த அவல நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

படங்கள்: அ. ராம்
[vuukle-powerbar-top]

Recent Post