Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்திய தேசிய லீக் கட்சிக்கு வேண்டுகோள் - மாட்டை அறுக்கும் போராட்டத்தை கைவிடுக !!

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே !! மாராத்திய தேசத்தில் மாட்டு இறைச்சிக்கு தடை  விதித்த காரணத்தால் அத்தடையை நீக்க வேண்டும் என்று தமிழகத்தில் பலரும் போராடி வருகிறார்கள் . சிறுபான்மை மக்களின் உணவு உரிமையை எந்த அரசும் தடுக்கக் கூடாது என்பதே நம் நிலைப்பாடும் கூட.

தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பான்மை தமிழர்களும், இந்து மதம் சார்ந்த தமிழர்களும் மாட்டு இறைச்சி உண்பதில்லை. மாட்டுக்கு திருவிழா எடுக்கும் ஒரே இனமாகவும் தமிழினம் விளங்குகிறது . உழவுக்கு உறுதுணையாக இருக்கும் காரணத்தால் பெரும்பான்மை தமிழர்கள் மாட்டு இறைச்சி உண்பதில்லை. அதே நேரம் இஸ்லாமிய கிறித்துவ தமிழர்கள் மாட்டு இறைச்சி உண்பதை யாரும் தடுக்கவும் இல்லை. நீங்கள் மாட்டு இறைச்சி உண்பது உங்கள் உரிமை என்பதை நாங்கள் அறிவோம். மாட்டிறைச்சி மீதான தடையை நீக்க வேண்டும் என்று நீங்கள் போராடுவதின் நியாயம் எங்களுக்கு புரிகிறது. இருப்பினும் போராட்டக் களத்தில் ஒரு மாட்டை அழைத்து வந்து அதை அங்கேயே அறுப்பது என்பது மதக் காழ்ப்புணர்ச்சியை  அதிகப்படுத்தும் செயலாகும். இதனால் தமிழ் மக்களிடம் இருந்தும் இந்து மக்களிடம் இருந்து இஸ்லாமியர்கள் அன்னியப்பட்டு நிற்பார்கள். தமிழகத்தில் எல்லோரும் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் . அத்தகைய மத நல்லிணக்கம் பாழ்படக் கூடாது என்றால் தயவு செய்து பொதுவெளியில் மாட்டை அறுக்கும் போராட்டத்தை செய்யாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் போராட்டத்திற்கு திராவிடக் கருத்தியல் கொண்டவர்கள்  மட்டுமே ஆதரவு வழங்குவார்கள் . அவர்களை தவிர ஒருவரும் ஆதரவு வழங்க மாட்டார்கள். அதனால் திராவிடர்கள் ஆதரவை வைத்துக் கொண்டு பெரும்பான்மை மக்களின் உணர்வுக்கு எதிராக செயல்படாதீர்கள். மாட்டிறைச்சியின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று நீங்கள் முற்றுகை போராட்டம் செய்யுங்கள் தவறில்லை. அதற்கு தமிழர்கள் பலரும் கூட ஆதரவு அளிப்பார்கள் . ஆனால் உணவுக்காக மட்டுமே கொலை செய்தல் வேண்டும் என்று கூறும் இஸ்லாமிய மார்கத்திற்கு எதிராக ஒரு போராட்டம் செய்வதற்கு மாட்டை அறுக்க வேண்டாம் . இக்கோரிக்கையை ஏற்பீர்கள் என்று நம்புகிறோம்.

இந்திய தேசிய லீக் கட்சி எண்: 984045550, 9840371088, 9840509689
[vuukle-powerbar-top]

Recent Post