Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர்களை முட்டாளாக்கும் திமுக அதிமுக கட்சிகள் ! 

கோவை மாநகராட்சியில் நடந்த நிதிநிலை அறிக்கை கூட்டத்தில் அதிமுக திமுக கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் இடையே மோதல் வெடித்தது. திமுக உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக நெற்றியில் நாமம் போட்டு வந்தனர். நாமத்தை அழிக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் தகராறு செய்துள்ளனர். வாய்த்தகராறு முற்றி  கைக்கலப்பில் முற்றியது. திமுக தான் ஊழல் கட்சி என்று அதிமுக முழக்கமிட , அதிமுக தான் ஊழலில் சிறந்த கட்சி என்று திமுக முழக்கிமிட ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். 

இதை பார்க்கும் தமிழ் மக்கள் தான் நாம் நியாயமாக நாமம் போட வேண்டும். அதிமுக திமுக என்ற இருபெரும் ஊழல் திராவிடக் கட்சிகளிடம் தமிழ்நாட்டை ஒப்டைவிட்டு அனைத்து உரிமைகளையும் தமிழ் மக்கள் நாம் இழந்து நிற்கிறோம். 

உண்மையில் திமுக அதிமுக ஆகிய கட்சிகள் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று நினைத்தால் , தமிழகத்தையும், தமிழ் இனத்தையும் , தமிழ் மொழியையும் படுகுழி பாதாளத்தில் தள்ளி விட்ட குற்றத்திற்காக  இவர்கள் இருவரும் இனி தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவிக்க வேண்டும் . தமிழினத்தின் இன்றைய அவல நிலைக்கு இவர்கள் இருவரும் தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும் . மானம் சூடு சொரணை என்று ஏதாவது இருந்தால் திராவிடக் கட்சிகள் தேர்தலை புறக்கணித்து தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு வழி விடட்டும் . 

 
[vuukle-powerbar-top]

Recent Post