Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தொடங்கியது தமிழ்த் தேசியப் போர். தேன்கனிக் கோட்டையில் முற்றுகை போராட்டம் செய்த பல்லாயிரம் தமிழர்கள் !!

கர்நாடகாவில் உள்ள மேகதாத்து பகுதியில் ஓடும் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அவ்வாறு கன்னட அரசு அணை கட்டுமே எனில் தமிழகத்தில் காவிரியை நம்பி வாழும் பல லட்சம் தமிழர்கள் பாதிக்கப்படுவர்கள். பெரும்பான்மை விவசாயம் என்பது தமிழகத்தில் அழிந்து விடும் அபாயம் உள்ளது. இதை இந்திய அரசு தடுத்து நிறுத்தி தமிழக மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும். கன்னட அரசின் அராஜக போக்கிற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். தமிழக மக்களின் பாரம்பரிய நீர் உரிமையை பாதுகாத்திட வேண்டும். இதை வலியுறுத்தியும், கன்னட அரசுக்கு எச்சரிக்கை வழங்கிடவும் இன்று தமிழக கர்நாடக எல்லையில் தேன்கனிக்கோட்டையில் 5000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் காவிரி உரிமை மீட்புக் குழுவின் கீழ் இணைந்து முற்றுகை போர் செய்தனர். இப்போராட்டம் தமிழர்களுக்கு எதிரான இந்தியாவை கண்டித்து நடைபெற்ற தமிழ்த் தேசியப் போர் என்றால் அது மிகையாகாது. இப்போரில் தமிழர்கள் வெல்வது உறுதி. தமிழர்களுக்கு எதிரான போக்கை இனியாவது அண்டை மாநிலங்களும் இந்தியாவும் உடனே கைவிட வேண்டும்.  


[vuukle-powerbar-top]

Recent Post