Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்து தேசியவாதியான மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கிருத்துவ இஸ்லாமிய மதத்தினர் மீதான தாக்குதல் வன்முறை அதிகரித்துள்ளதை நாம் இந்தியாவெங்கும் காண முடிகிறது. கிருத்துவ தேவாலயங்கள் எரிப்பு, கிருத்துவ பள்ளிகள் சூறையாடப்படுதல் என பல்வேறு தாக்குதலின் உச்சகட்டமாக மேற்குவங்கத்தில் 72 வயது கன்னித்துறவி பலபேர் கொண்ட குழுவால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார். சங்க பரிவார் அமைப்பின் ஆதரவாளர்கள் இத்தகைய செய்கையை செய்துள்ளதாக தெரிகிறது. கிருத்தவ, இஸ்லாமிய சிறுபான்மை மதத்தினரை எச்சரிக்கும் விதமாக இந்துத்வா தீவிரவாதிகளால் இத்தகைய வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது. இப்படியான கொடுமைக்கு பிறகும் பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகளை மன்னித்து விடுமாறு பாதிக்கப்பட்ட கன்னித்துறவி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

படத்தில் காணும் பதாகையில், பாலியல் வன்முறைக்கு எதிராக சிறப்பான கருத்தை எழுதியுள்ளனர். பொதுவாக இளம் பெண்கள், ஆபாசமாக ஆடை அணிவது தான் பாலியல் வன்புணர்வுக்கு காரணம் என்று கூறும் கருத்தை இப்படம் உடைக்கிறது. படம் சொல்லும் செய்தி .... 

௧. இவர் வெளியில் காலம் கடந்து இரவில் போகவில்லை 
௨. இவர் பாலியல் உணர்வுகளை தூண்டும் விதமாக ஆடை அணியவில்லை 
௩. இவர் தனது ஆண் நண்பர்களுடன் வெளியில் செல்லவில்லை 
௪. இவர் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய இளைமையானவரும் அல்ல.

இவர் ஒரு கன்னித்துறவி  

அவர்கள் இவரை பாலியல் வன்புணர்வு செய்தனர் 

பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு ஒரு காரணம் தேவையில்லை !

 
[vuukle-powerbar-top]

Recent Post