Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாம் தமிழர் இன எழுச்சி மாநாட்டிற்கு தடை கேட்டு இந்துத்வா பிரிவினைவாதிகள் காவல்துறையிடம் புகார் !!

திருச்சியில் நடக்க இருக்கும் நாம் தமிழர் இன எழுச்சி மாநாடு அங்கு நடைபெற அனுமதிக்கக் கூடாது என்ற ஒரே மாதிரியான புகார் வடிவத்தை பல இந்துத்வா பிரிவினைவாதிகள் காவல்துறையிடம் கையளித்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ் மக்களை மதத்தால் பிரித்து ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொள்ளும் வகையில் பிரிவினையை தூண்டும் இந்துத்வா அமைப்புகள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமானை பிரிவினைவாதி என்று கூறியுள்ளது தான். மேலும் சீமானை சைமன் என்று அவர் ஒரு கிருத்துவர் என்றும் புகாரில் கூறியுள்ளார் இந்துத்வா அமைப்பினர். தமிழ் மக்களை சாதி மதம் கடந்து ஒன்றிணைக்கும் நாம் தமிழர் கட்சி பிரிவினைவாதி கட்சி என்றும் , தமிழ் மக்களை சாதியால் மதத்தால் பிரிக்கும் இந்துத்வா அமைப்புகள் தேசபக்தர்கள் என்றும் இந்துத்வா சக்திகள் கூறுவது எப்படிப்பட்ட கயமை என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள்.

ஆரிய இந்துத்வா அமைப்பினர் கொடுத்த புகாரிலேயே பல பிரிவினை கருத்துக்கள் அடங்கியுள்ளன தமிழ் மக்களிடையே கலவரத்தை தூண்டும் நோக்கத்தில் , தமிழர் ஒன்றிணையக் கூடாது என்ற எண்ணத்தில் கொடுக்கப்பட்ட புகாரை தமிழக காவல்துறை ஏற்கக் கூடாது . மேலும் இதுபோன்ற பிரிவினையை தூண்டும் புகார் கொடுத்துள்ள  நபர்களின் மேல் கடுமையான நடவடிக்கை தமிழகக் காவல்துறை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்தில் தமிழர்கள் ஒன்று கூடுவதை எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது , தடுக்க உரிமையும் இல்லை என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் . தமிழர் ஒன்றுகூடலை தடுக்க நினைக்கும் ஆரிய இந்துத்வா சக்திகளை இரும்புக் கரம் கொண்டு காவல்துறை ஒடுக்க வேண்டும் .



[vuukle-powerbar-top]

Recent Post