Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

'கான்' களின்  படங்களை பார்க்காதீர்கள் - பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சாத்வி . அதே போல துருக்கி தேசத்தில் பிறந்த இந்தி மொழியை பேசாதீர்கள் என்று சொல்வாரா ?

இந்தி இனத்தை  சேர்ந்த இஸ்லாமிய நடிகர்கள் நடிக்கும் படங்களை பார்க்காதீர்கள் என்று கூறும் ஆர்.எஸ்.எஸ்,  பாஜக மதவாத, பிரிவினைவாத அமைப்புகள்  இஸ்லாமியர்கள் இந்த நாட்டிற்கு கொண்டுவந்துள்ள இந்தி மொழியை புறக்கணிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. உண்மையில் இந்தி மொழிக்கும் இந்தியாவிற்கு எந்த தொடர்பும் இல்லை. இஸ்லாமிய படையெடுப்புக்கு பிறகு தான் இந்தி மொழி இந்திய நாட்டில் வேரூன்றியது. 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தி என்பதே இந்திய நாட்டில் இல்லை. காரிபோளி, மைதிலி என்னும் பீகாரி மொழி, இந்துஸ்தானி, ஹரியான்வி போன்ற நாற்பதற்கும் மேற்பட்ட மொழிகளை அழித்து தான் இந்தி மொழி உருவானது. முகலாயர்கள் கொண்டு வந்த மொழிகளோடு இந்திய மொழிகளும் சேர்ந்தே இந்தி செயற்கையாக உருவாக்கப்பட்டது. தற்போது உருது சொற்களின் துணையில்லாமல் இந்தியால் இயங்கவே முடியாது. மேலும் இந்தி மொழியின் பிறப்பிடம் துருக்கி என்று ஒரு ஆய்வும் உறுதியாக கூறுகிறது. அதனால் இந்தியர்களுக்கு அந்நியமான இந்தி மொழியை இந்தியர்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று பாஜக ஆர் எஸ் எஸ் அமைப்புகள் கூறுமா ? அப்படிக் கூறினால் இந்தியர்கள் சும்மா விடுவார்களா? இந்தி மொழியை தூக்கிப் பிடிக்கும் இந்துத்வா அமைப்புகள் இந்தி நடிகர்களை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வது நகைச்சுவை. ஆகமொத்தம் பாஜக ஆர் எஸ் எஸ் பிரிவினைவாதிகளுக்கு இந்தி வரலாறு கூட தெரியாது என்பது தான் உண்மை.  
[vuukle-powerbar-top]

Recent Post