Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்திய அரசு புதிய புதிய நாணயங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. ரூபாய் தாள்களில் ஒரு சிறு மூலையில் தமிழ் மொழிக்கு இடமளிக்கும் இந்திய அரசு ஏன் நாணயங்களில் ஒரு முறை கூட தமிழ் மொழிக்கு இடமளிக்கவில்லை. இந்தியாவில் முதன் முதலில் நாணயம் அச்சிட்டு வெளியிட்டது தமிழ் மன்னர்களே. ஆனால் இப்போது தமிழகம் இந்திய அரசின் கீழ் வந்து விட்ட பிறகு ஒருமுறை கூட தமிழ் மொழிக்கு இடமளிக்கவில்லை இந்திய அரசு.

தஞ்சை பெரிய கோவிலுக்கும், திருவள்ளுவருக்கும் நாணயம் வெளியிட்ட இந்திய அரசு குறைந்தபட்சம் அந்த நாணயங்களிலாவது தமிழ் மொழியை பயன்படுத்தி இருக்கலாம். இந்தியாவின் மூத்த மொழி தமிழ் என்ற அடிப்படையிலாவது தமிழ் மொழிக்கு ஒரு முறை இடமளிக்கலாம் இந்திய அரசு. ஆனால் அப்படி செய்யாமல் எப்போதும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே இந்திய அரசு நாணயம் வெளியிட்டு வருகிறது.

இப்போது பல புதிய நாணயங்கள் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வரும் நிலையில் ஒரு சில ஆயிரம் நாணயங்களிலாவது தமிழ் மொழிக்கு இந்திய அரசு இடமளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் வலுப்படுத்துவோம். இதற்காக தமிழக அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.



[vuukle-powerbar-top]

Recent Post