Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மசூதிகள் எந்நேரத்திலும் இடிக்கக்கூடிய வெறும் கட்டிடங்களே என்று சு.சாமி அசாம் மாநிலத்தில் திமிராக பேசியுள்ளார்

அசாமில் மதக்கலவரத்தை  தூண்டும் விதமாக சு.சாமி பேசியதற்கு அசாம் மாநில முதல்வர் உட்பட பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சுப்பிரமணியன் சாமியை இனி அசாம்  மாநிலத்தில் நுழைய விட மாட்டோம் என்று சில அமைப்பினர் கூறியுள்ளனர். அசாம் மாநில பாஜக தமிழக பாஜக வை போலவே சுப்பிரமணியன் சாமி கருத்து பாஜக கருத்தல்ல அது அவரின் சொந்த கருத்து என்று கூறியுள்ளது. சு.சாமிக்கு எதிராக அசாமில் வழக்கும் பதிவு செய்துள்ளனர் அசாமிய மக்கள்.

சு.சாமி இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமே எதிரான கருத்தை பதிவவில்லை. இந்தியாவில் வாழும் எல்லா தேசிய இனங்களுக்கும் எதிராகவே தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்கிறார் சு.சாமி. ஆனால் இதற்கு தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்த கண்டனமும் பதியப்படவில்லை. வழக்கும் பதியப் படவில்லை. தமிழக அமைப்புகள் , கட்சிகள் மட்டும் அவ்வப்போது சு.சாமி உருவ பொம்மையை எரித்து வருகிறார்கள் / இருப்பினும் சு.சாமி எந்த வித சிக்கலும் இல்லாமல் தமிழகத்திற்கு வந்து போகிறார்.

அசாம் மக்களைப் போலவே தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் மக்களும் ஒற்றைக் குரலில் சு.சாமியை எதிர்க்க வேண்டும். சு.சாமிக்கு எதிராக பல வழக்குகள் பதியப்படவேண்டும் . தமிழகத்தில் நுழைந்தால் சு. சாமியை கைது செய்யப்பட வேண்டும். அவனை தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுப்பதே சு.சாமிக்கு நாம் செய்யும் எதிர்வினையாகும். 
[vuukle-powerbar-top]

Recent Post