Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

யார் சொன்னது ஐந்தறிவு விலங்குகளுக்கு பாசம் இல்லை, பந்தம் இல்லை, உணர்வுகள் இல்லை என்று ?

இந்த படத்தை பாருங்கள். மனை வணிகக் கொள்ளையை எதிர்த்து போராடிய மாவட்ட ஆட்சியர்  (இ. ஆ.ப) இரவி அவர்களின் இறப்பிற்கு அவரது வீட்டின் நாய் கண்ணீர் விட்டு அழும் உறவினர்களுடன் சேர்ந்து தனது துக்கத்தை வெளிப்படுத்துகிறது.

ஒரு நாய்க்கு இவ்வளவு பாசம் உள்ளது. தன்னை வளர்த்த மனிதருக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறது . ஐந்தறிவு கொண்ட உயிர்களால் மனிதர்களை போல பேச முடியவில்லையே தவிர மனிதர்களை போலவே அத்துணை உணர்வுகளும் கொண்டதாக உள்ளது.

ஆனால் ஆறறிவு கொண்ட மனிதர்கள் அன்பு, இரக்கம், கருணை என அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். இரவியின் மரணம் ஒரு திட்டமிட்ட கொலையாகவே கருதப்படுகிறது. இரக்கமில்லா கொலைகாரர்கள் இந்த நாயை பார்த்தாவது மனம் திருந்த வேண்டும்.

மரணித்த இரவி அவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது நாய்க்கும் நம் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம். 
[vuukle-powerbar-top]

Recent Post