Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உடனடித் தேவை தமிழ்த் தேசிய மாணவர் அணி !! 

தற்போது தமிழகப் போராட்டக்களத்தில் பல மாணவர்கள் அணிகள், அமைப்புகள், கட்சிகள் உள்ளன. தெரிந்தோ தெரியாமலோ இந்த மாணவர்கள் அணிகள் அனைத்தும் திராவிட பெரியாரிய கருத்தியலை உள்வாங்கிய மாணவர்கள் அணியாகவே அமைந்துள்ளன. திராவிட கருத்தியல் கொண்ட மாணவர்கள் அணிகள் உருவாகுவது எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய கட்டமைப்புக்கு பெரும் சிக்கலாகவே முடியும். காரணம் திராவிட கருத்தியலை உள்வாங்கிய மாணவர்களின் எழுச்சி என்பது திராவிட அரசியலை வலிமைப்படுத்துமே அன்றி தமிழ்த்தேசிய அரசியலை வலிமையாக்காது. தமிழ்த்தேசிய அரசியல் வலிமையாகாத போது தமிழகத்தில் இணைக்கட்டமைப்பும் தமிழர்களின் அரசியல் வலிமையும் சாத்தியமாகாது. கடந்த கால வரலாறும் இதைத் தான்  நமக்கு உணர்த்துகிறது. திமுக போன்ற திராவிட கட்சிகள் மாணவர்களின் போராட்டங்களை எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதை நாம் பார்த்து வந்துள்ளோம். திராவிடக் கருத்தியல் எந்த சூல்நிலையிலும் இனி தமிழகத்தில் வலுப்பெறக்கூடாது. இது மேன்மேலும் தமிழகத்தை சுரண்டும் வேற்றின மக்களையே  ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும். 

அதனால் தமிழகத்திற்கு  உடனடித் தேவையாக உள்ளது திராவிட பெரியாரிய கருத்தியலை முற்றிலும் புறக்கணிக்கும் தமிழ்த் தேசிய மாணவர் அணியாகும். இப்படியான அணி உருவாகுதல் மட்டும் தான் தமிழர்களின் மொழி உரிமை, இன உரிமை, பண்பாட்டு உரிமை. மாநில தன்னாட்சி உரிமை என அனைத்தையும் மீட்டெடுக்கும். தமிழ் மாணவர்கள் இதை சிந்திந்து விரைவில் தமிழ்த் தேசிய மாணவர் அணியை, அமைப்பை உருவாக்க முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம். 


[vuukle-powerbar-top]

Recent Post