Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தி மொழி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த 30 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தி வகுப்புகள் எடுப்பதற்கு உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுவரை பொதுமக்களின் மீது இந்தியை திணித்து வந்த இந்தி அரசு இப்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதே இந்தியை திணிக்க முற்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. பாராளுமன்றத்தில் இந்தி பேசினாலும் மொழிபெயர்ப்பு கருவியின் உதவியுடன் பா.ம உறுப்பினர்கள் புரிந்து கொள்ளவதற்கு வசதி உள்ளது. இருப்பினும் பாஜக அமைச்சர்கள் தொடர்ந்து இந்தியில் மட்டுமே பேசுவதால் இந்தி அல்லாத இன மக்களுக்கு இது பெரும் சிக்கலாக உள்ளது என்று சில பா.ம உறுப்பினர்கள் கூறியுள்ளனர். அதனால் இவர்களுக்கு இந்தியை கற்றுக் கொடுக்க இந்தி அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதே போல தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சை தெரிந்து கொள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ் மொழி வகுப்பு நடத்தப்பட வேண்டும். தமிழ் தெரியாமல் இந்தியர்களும் தடுமாறுகிறார்கள். தமிழக பா.ம உறுப்பினர்கள் இக்கோரிக்கையை இந்தி அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

[vuukle-powerbar-top]

Recent Post