Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் மீண்டும் தெலுங்கர் ஆட்சி அமையும்  முயற்சி தீவிரம் !! 

கடந்த 500 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வரும் தெலுங்கர்களான திராவிடர்கள், மொழி வழி மாநிலம் பிறந்த பின்னரும் தமிழகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து வருகின்றனர். தெலுங்கர்கள் என்று வெளிப்படையாக கூறினால் தமிழ் மக்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள் என்பதற்காக திராவிடர்கள் என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழகத்தில் ஆளுமை செலுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவு தரும் இயக்கங்களும் தெலுங்கர்கள் தான். தமிழகப் பிரச்சனைகளுக்கு போராடும் குழுக்களும் தெலுங்கின குழுக்களே . தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளுக்கு தெலுங்கர்களே தலைமை தாங்கி போராடியும் வருகிறார்கள். அந்த அளவிற்கு தெலுங்கர்கள் தமிழகத்தில் வலுபெற்று உள்ளனர். தெலுங்கர்களே இங்கு ஆளும் கட்சியாக, எதிர் கட்சியாக இருக்கும் நிலையை உருவாக்கி விட்டார்கள். 

இப்போது திராவிடத்தின் முகவரியாக விளங்கும் திமுக , தேமுதிக வுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது. இந்த திராவிடக் கூட்டணியுடன் தமிழர் கட்சிகளும் வேறு வழியின்றி திராவிடத்தின் தலைமையின் கீழ் கூட்டணியில் இணைந்து சில தொகுதிகளுக்காக சமரசம் செய்து கொள்ளும். இது தான் காலகாலமாக நடக்கிறது. மேலும் திராவிடக் கருத்தியல் இப்போது சரிந்து கிடக்கும் நிலையில் , ஈவேரா மற்றும் ஈவேரா மடங்களை காப்பாற்ற வேண்டுமெனில் திமுக ஆட்சி பிடிக்க வேண்டும். அதனால் ஈவேரா பக்தர்கள் திமுக -தேமுதிக திராவிட கூட்டணி வெற்றிபெற  தங்கள் கடும் பங்களிப்பை வழங்குவார்கள். இதில் தமிழர் நலம் என்பது முற்றிலும் புறக்கணிக்கப் படும். மீண்டும் ஏமாளியாக தமிழர்கள் மட்டுமே இருப்பார்கள். இன்னும் எத்தனை ஆண்டுகள் தமிழர்கள் தெலுங்கர்களின் கீழ் வாழ்வது? இன்னும் எத்தனை ஆண்டுகள் தமிழர்கள் தங்கள் உரிமைக்காக போராடுவது? தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டி உள்ளது ? 

தமிழர்கள் தங்கள் சாதி மதம் ஆகிய சிறிய முரண்களை கடந்து தமிழர்களாக ஒன்றிணைந்து திராவிடர்களை வீழ்த்த உறுதி ஏற்க வேண்டும். தமிழ்ச் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் அந்நிய சக்திகளை இனம்கண்டு தூக்கி எறியவேண்டும். நாம் தமிழர்களாக இணைந்து தமிழர் ஆட்சியை தமிழகத்தில் நிலைநிறுத்த போராடுவோம். நமக்கான அரசை நாமே உருவாக்குவோம்.  








[vuukle-powerbar-top]

Recent Post