Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பெரியார் படத்தை உன்னால் எரிக்க முடியுமா ? திராவிடர் இயக்கத்தை சேர்ந்த பெரியார்  பக்தரின் கொலை மிரட்டல் !!

நேற்று இரவு நமக்கு மிகவும் அறிமுகமான திராவிடர் அமைப்பை சேர்ந்த தம்பி ஒருவர் நம்மை அலைபேசியில் அழைத்து , 'நாங்கள் தாலி அறுக்கும் போராட்டம் செய்தால் நீங்கள் பெரியார் படம் எரிப்பு போராட்டம் செய்வீர்களா?' என்று கேட்டார்  . நானும் 'ஆம் செய்வோம்' என்று பதில் கூறினேன்.

அதற்கு அவர் 'நீ மட்டும் ஒரு தமிழனாக இருந்தால் பெரியார் படத்தை எரித்துப் பார்' என்று சொன்னவர், பெரியார் இல்லையென்றால் தமிழன் சட்டை கூட அணிந்திருக்க மாட்டான் என்று வழக்கம் போல திராவிடர்கள் சொல்வதையே சொன்னார். நான் அந்த தம்பியிடம்  நிதானமாக எடுத்துக் கூறினேன் , முதலில் இத்தகைய தாழ்வு மனப்பான்மையில் இருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும் என்றும் , மற்ற மாநிலங்களில் எல்லாம் எப்படி பெரியார் இல்லாமலே மக்கள் சட்டை போட்டனர் என்று விளக்கி கூறினேன்.

இதைக்கேட்டதும் கோபம் கொண்ட தம்பி, முதலில் அண்ணன் என்று அழைத்தவர் , பின்பு தோழர் என்று இறங்கி, இறுதியில் வாடா போடா என்று ஒருமையில் பேசத் தொடங்கினார் . ஒரு கட்டத்தில் பெரியார் பக்தி முற்றி கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டத் தொடங்கினார். குடும்பம், தொழில் என எல்லாவற்றையும் இழுத்து தனிநபர் தாக்குதல் நடத்தினார். தனிநபர் தாக்குதல் நடத்த வேண்டாம், கருத்தை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளுங்கள், இவ்வளவு கோபம் வேண்டாம் என்றேன் . அதற்கு அவர் , 'நான் கோபப்பட்டால் இந்நேரம் ஒரு கொலை விழுந்திருக்கும்' என்று கொலை மிரட்டலும் விடுத்தார்.

இருப்பினும், நான் அவருக்கு திராவிட மயக்கத்தில் இருந்தும் பெரியார் பக்தியிலும் இருந்தும் வெளியேறுங்கள் , ஈவே.ரா தமிழர்களுக்கு எதிரான என்னென்ன செய்தார் என்பதையும் எடுத்துக் கூறினேன். ஆனாலும் மிரட்டல் விடுத்த தம்பி என்ன நான் சொன்னாலும் கேட்பது போல தெரியவில்லை. ' நீ முகநூலில் மட்டுமே எழுதி இளைஞர்களை குழப்பிக் கொண்டு இருக்கிறாய், நீ தமிழன் தானா , நீ தமிழன் என்றால் உன் சாதி சான்றிதழை முகநூலில் வெளியிடு என்று ஆவேசத்தில் கொந்தளித்தார். இதன் பின்பு அலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

நாம் திராவிட அமைப்புகளுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, உங்கள் திராவிட கருத்தியல் பலமாக இருக்குமே என்றால் நீங்கள் யாருக்காக பயப்படுகிறீர்கள் ? ஏன் தனிமனித தாக்குதல், மிரட்டல் விடுக்கிறீர்கள் ? தமிழர்களுக்கு பகுத்தறிவு இல்லை என்று சொல்லும் நீங்கள் பெரியார் படத்தை எரித்தால் திராவிடம் காணாமல் போய் விடுமா என்ற பகுத்தறிவு கேள்வியை  ஏன் உங்கள் முன் நீங்கள் வைக்கவில்லை?  பலரது மனம் புண்படும்படி தாலி அறுக்கும் போராட்டத்தை முன்னேடுக்காதீர்கள் என்று பலர் கூறியும், அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாதது ஏன் ? தாலி அறுக்கும் விழாவை முன்னெடுப்பதின் மூலமாக தமிழகத்தில் மீண்டும் இந்து மதவாத அமைப்புகளை காலூன்ற வைக்கப் போகிறீர்களா ? ஏற்கனவே திராவிடத்தால் ஆரியம் தமிழகத்தில் வேரூன்றி நிற்கிறது . இனியும் ஆரியக் கருத்தியல் பலம் பெற வேண்டுமா ? திராவிடத்தால் ஆரியமும் , ஆரியத்தால் திராவிடமும் தமிழகத்தில் நிலைபெற்று பல லட்சம் தமிழ்ப் பெண்கள் தாலி அறுந்து நிற்கிறார்கள் . இதற்கு மேலும் ஏன் தாலி அறுக்கும் போராட்டத்தை செய்கிறீர்கள் ? இந்த கேள்விகளை எல்லாம் உங்கள் பகுத்தறிவை பயன்படுத்தி திராவிடர்கள் சிந்திக்க வேண்டும் . இனியாவது தனிநபர் தாக்குதல் , கொலை மிரட்டல் போன்ற கோழைத்தனமாக செய்கைகளில் திராவிடர்கள் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பின்குறிப்பு : மிரட்டல் விடுத்த நபரின் பெயரையோ இயக்கத்தையோ நாம் வெளியிடவில்லை . காரணம் அந்த தம்பியின் மேல் தவறில்லை . அவரை தவறாக வழிநடத்திய திராவிடக் கருத்தியல் மேல் தான் தவறு உள்ளது என்ற வகையில் அவரை நாம் காட்டிக் கொடுக்கவோ அல்லது அவரின் மீது புகார் அளிக்கவோ இந்த நிமிடம்வரை விரும்பவில்லை. ஈ.வே.ரா  படத்தை எரிப்பதும் எரிக்காமல் இருப்பதும் பெரியார்வாதிகளின் கைகளில் தான் இனி இருக்கிறது.


[vuukle-powerbar-top]

Recent Post