Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கர்நாடகத்தில் கன்னட மொழி வழிக் கல்வியை கட்டாயமாக்கும் சட்டத்தை நிறைவேற்றியது கர்நாடக அரசு !! தமிழக அரசு திருந்துமா ?

தாய் மொழியில் கல்வி பயில்வதே இயல்பானது இயற்கையானது என்பது பல மொழி அறிஞர்களின் கூற்றாகும். கர்நாடக முதலமைச்சர் தாய் மொழியில் அனைவரும் தொடக்கக் கல்வியை பயில வேண்டும் என்ற பல காலம் குரல் கொடுத்து வருகிறார் . இருப்பினும் தனியார் பள்ளிகள் கன்னட வழிக் கல்வியை கடுமையாக எதிர்த்து வழக்கும் தொடுத்தனர். இந்நிலையில் நேற்று கர்நாடக சட்டமன்றத்தில் அனைத்து கர்நாடக வாழ் மக்களுக்கும் கன்னட மொழி வழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என்ற சட்டம் நிறைவேற்றப் பட்டது. கன்னடத்தை தாய் மொழியாக கொள்ளாதவர்களுக்கு அவர்களின் சொந்த மொழியில் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிகிறது. பெரும்பான்மை கன்னட மக்கள் அவர்கள் குழந்தைகளை இனி கன்னட வழியில் தான் படிக்க வைக்க முடியும் . மேலும் இந்த சட்டத்தை ஆதரிக்க மோடியை சந்தித்து உள்ளார் கர்நாடக முதல்வர். மேலும் அண்டை மாநில முதல்வர்களும் இத்தகைய சட்டத்தை அவர்கள் மாநிலங்களில் நடைமுறைப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளார் கர்நாடக முதல்வர் .

தமிழகத்திலோ நிலைமை தலைகீழ் . இருக்கும் தமிழ் வழிக் கல்வி நிலையங்களையும் மூடி வருகிறது தமிழக அரசு . நாற்பது ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழுக்கும் தமிழ்க் கல்விக்கும் பெரும் சரிவை ஏற்படுத்தியது தான் திராவிட ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு வழங்கிய கொடை. தாய் மொழியையும், தமிழினத்தையும் காக்க வேண்டுமெனில் தாய்மொழிக் கல்வியை தமிழக அரசு அனைவருக்கும் கட்டாயமாக்க வேண்டும். தாய்மொழிக் கல்வி, அருகாமைப் பள்ளி , இலவசக் கல்வி என்ற மூன்று அடிப்படை உரிமைகளை மக்களுக்கு தமிழக அரசு வழங்க முன்வரவேண்டும் .


[vuukle-powerbar-top]

Recent Post