Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தி அரசின் மற்றுமொரு மொழித் தீண்டாமை செயல்பாடு. இந்தியில் தகவல்களை வெளியிடும் ஊழியர்களுக்கு வெகுமதி: ஏர் இந்தியா அறிவிப்பு !!

ஏர் இந்தியா வானூர்தி சேவைகள் இந்தி தேசத்தில் மட்டுமல்லாது இந்தி அல்லாத பல பகுதிகளில் செயல்படுகிறது. வானூர்தி உள்ளே அறிவிக்கப்படும் பாதுகாப்பு உள்ளிட்ட தகவல்கள் அந்தந்த மாநிலத்தின் மொழியில் தான் வழங்கப்பட வேண்டும் . ஆனால் அவ்வாறு வழங்கப்படாமல் இந்தியில் ஆங்கிலத்தில் மட்டுமே வானூர்தி நிறுவனங்கள் வழங்குகின்றன . இந்நிலையில் ஏர் இந்தியா வானூர்தி நிறுவனம் இந்தியில் அறிவிப்புகள் வெளியிடும் வானூர்தி ஓட்டுனர்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பதாக கூறியுள்ளது பிற மொழிகளை இந்திய அரசு மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

இந்தி அரசுக்கு அதிகமாக இந்தி அல்லாத மக்களே வரி கட்டுகிறார்கள். இருப்பினும் இந்திக்கு மட்டுமே இந்தி அரசு முன்னுரிமை கொடுப்பது பிற தேசிய இனங்களை ஒடுக்கும் செயலாகும் . இத்தகைய நடவடிக்கையை இதுவரை தமிழக அரசும் கண்டிக்க முன்வரவில்லை . பல முறை நடுவண் அரசுக்கும் மாநில அரசுக்கும் கோரிக்கை வைத்தும் பயனில்லை. வானூர்திகளை பயன்படுத்தும் ஒவ்வொரு தமிழரும் தங்கள் மொழியில் கட்டாயம் அறிவிப்புகள் வழங்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் புகார் அளிப்பதின் மூலமாகவே இந்தி வானூர்தி நிறுவனங்களை நாம் வழிக்கு கொண்டு வர இயலும். மக்களின் கைகளில் தான் தங்கள் உரிமை உள்ளது என்பதை நினைவில் கொள்வோம் . 
[vuukle-powerbar-top]

Recent Post