Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆந்திராவிற்கு ஆதரவாக செயல்படும் ஆளுநர் ரோசய்யாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை. 

அண்மையில் ஆந்திரா சேஷாசலம் வனப்பகுதியில் 20 தமிழர்கள் ஆந்திர வனத்துறையால்  படுகொலை செய்யப்பட்டனர் . இதன் எதிரொலியாக தமிழகத்தில் தெலுங்கு அரசுக்கும் , தெலுங்கு நிறுவனங்களுக்கும் எதிராக கடுமையான போராட்டங்கள் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது. ஆந்திராவிற்கு செல்லும் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது . ஆந்திர முதல்வருக்கு சொந்தமான அங்காடி ஒன்றை தமிழர்கள் அடித்து நொறுக்கினர் . பொதுமக்கள் கோபம் கொண்டு அந்த அங்காடிகளில் உள்ள பொருட்களை எல்லாம் சூறையாடினர். ஆந்திர வங்கிகள் முற்றுகையிடப் பட்டன. சந்திரபாபு நாயுடு உருவ பொம்மைகள் பல்வேறு இடங்களில் எரிக்கப்பட்டன . 

இப்படி தன்னெழுச்சியாக நடைபெறும் போராட்டங்களை தமிழக காவல்துறை இரும்புக் கரம் கொண்டு அடக்கி வருகிறது . போராட்டக்காரர்கள் மீது பல்வேறு கடுமையான வழக்குகளை பதிவு  செய்து வருகிறது தமிழகக் காவல்துறை. காவல்துறையின் இத்தகைய கடும் போக்கிற்கு தமிழகத்தின் ஆளுநராக செயல்படும் தெலுங்கர் ரோசையாவின் அழுத்தம் தான் காரணம் என்ற செய்தி வந்துள்ளது. தெலுங்கு அரசுக்கு ஆதரவாகவே தெலுங்கர்  ரோசய்யா செயல்படுவதாக தெரிகிறது. ஏற்கனவே தமிழக அரசு ஒரு நிழல் அரசாகத் தான் செயல்பட்டு வருகிறது. தமிழர்கள் படுகொலை விடயத்தில் தமிழக அரசு எந்த ஒரு சிறப்பான நடவடிக்கையும் எடுக்காத நிலையில், ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார் எனத் தெரிகிறது. போராடும் தமிழர்கள்  மீது கடுமையான வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறார். 

இப்படி ஆந்திர அரசுக்கு பக்க சார்பாக செயல்படும் தமிழக ஆளுநர் ரோசையாவை இந்திய நடுவண் அரசு உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். அண்டை மாநிலத்தை சேர்ந்த எவரையும் தமிழக ஆளுநர் பதவியில் அமர்த்தக் கூடாது. தமிழக அரசும் இப்பரிந்துரையை நடுவண் அரசுக்கு கொடுக்க வேண்டும், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இதே கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கிறது.  



[vuukle-powerbar-top]

Recent Post