Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திராவிடர் கழகம் அறிவித்துள்ள தமிழ்ப் பெண்களின் தாலி அறுக்கும் போராட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதை நாம் வரவேற்கிறோம். 

தொடர்ந்து தமிழர்களின் பண்பாட்டிற்கு எதிரான திராவிடர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் தமிழ்ப் பெண்கள் பெரும்பாலும் தாலியை தங்கள் திருமன அடையாளமாகவும், புனிதமாகவும் கருதி வருகிறார்கள். தமிழர்களின் எல்லா அடையாளத்தையும் அழித்து விட்ட திராவிடம் கடைசியாக தமிழர் பண்பாட்டின் அடையாளமாக எஞ்சி நிற்கும் தாலியை அகற்ற வேண்டும் என்று துடிக்கிறது. 

ஈழத்தில் ஒரு லட்சம் பெண்களின் தாலி அறுக்க துணை போனது திராவிடம். தமிழக மீனவர்கள் 800 பேர்கள் படுகொலையை தடுக்கத் தவறி அவர்கள்  மனைவிகளின்  தாலியை அறுத்தது திராவிடம். அண்மையில் ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் கொல்லபட்டு அவர்கள் மனைவிகள் தாலி அறுப்பட காரணமாக இருந்ததும் திராவிடம் தான். 

தமிழ்ப் பெண்களின்  தாலி அறுக்கும் நிகழ்விற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அப்படி தாலி அறுக்கும் நிகழ்வை நடத்தினால் தமிழர்கள் ஒன்றிணைந்து போராடுவோம் என்று காவல்துறையிடம் தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் நாம் கோரிக்கை விடுத்தோம். பல பெண்கள் அமைப்பும், இந்து அமைப்புகளும், தமிழ் அமைப்புகளும் தாலி அறுக்கும் நிகழ்வை கடுமையாக எதிர்த்து புகார் அளித்தனர். 

இப்புகார்களின் அடிப்படையில் இப்போது தமிழக காவல்துறை தாலி தி.க. வீரமணி நடத்தவுள்ள தாலி அறுக்கும் நிகழ்விற்கு தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கையை தமுகவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஒரு மனதாக வரவேற்கிறது . இனி வரும் காலங்களிலும் தமிழர்களின் பண்பாட்டை வரலாற்றை இழிவு செய்யும் திராவிடர்களின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம். 

 

[vuukle-powerbar-top]

Recent Post