Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர் புத்தாண்டு சித்திரை ஒன்றா, தை ஒன்றா அல்லது வானவியல் அடிப்படையில் வேறு ஒரு நாளா என்பதை தமிழர் ஆட்சி வந்தவுடன் நாம் உறுதி செய்வோம்!!

ஆரியமும் திராவிடமும் மாற்றி மாற்றி தமிழர் புத்தாண்டு நாளை குறிப்பிடும் நிலையில் எது உண்மையான நிலையான புத்தாண்டு என்பதை தமிழர் ஆட்சி மலர்ந்த பிறகே நாம் தீர்மானிக்க இயலும். பிற மாநிலங்கள் எல்லாம் அந்தந்த தேசிய இனங்களே ஆளும் நிலையில் அவர்கள் பண்டிகையை அவர்கள் ஒன்றாக கூடி கொண்டாடி வருகிறார்கள். தேசியா   இனத்திற்கான கட்டமைப்பை அவர்கள் உருவாக்கி விட்டனர். அதனால் அவர்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை. ஆனால் தமிழ் நாட்டில் திராவிட கருத்தியலும் ஆரியக் கருத்தியலும் வேரூன்றிய காரணத்தால் தமிழர்களால் தங்கள் இன அடையாளத்தை தக்க வைப்பது என்பதே பெரும் சிக்கலாக உள்ளது. எது தமிழ்ப் புந்தாண்டு என்பதை தமிழர் அல்லாதவர்கள் மாற்றி மாற்றி தீர்மானித்து வருகிறார்கள்.

திராவிட அரசியல் வீழ்த்தப்பட்டு தமிழர் ஆட்சி மலரும் போது தமிழர் புத்தாண்டு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். தமிழ்ச் சான்றோர்களும்,தமிழர் வானவியல் நிபுணர்களும் ஒன்று கூடி ஒவ்வொரு ஆண்டும் பல் சக்கிர நாட்காட்டியின் அடிப்படையும் தமிழ்ப் புத்தாண்டை முரசறைந்து அறிவிப்பார்கள்.

அந்த நாள் வரும் வரை சித்திரை ஒன்றாம் நாளை கொண்டாடுவோருக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். தை ஒன்றாம் நாளை புத்தாண்டாக கொண்டாடுவோருக்கு சித்திரை திருநாள் வாழ்த்துகள்.

[vuukle-powerbar-top]

Recent Post