Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழினப் பகையான ஆரியமும் திராவிடமும் மோதிக் கொள்ள வழக்கம் போல குழப்பத்தில் தமிழர்கள் !! 

ஆரியர்களின் இன்னொரு வடிவமே திராவிடம். தமிழினப் பகையில் திராவிடர்களின் இன்னொரு முகமே ஆரியம். இது தமிழின விரோத கருத்தியலும் தமிழ் மண்ணை விட்டு அகற்றப்பட வேண்டியது. ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் படையெடுத்து வந்து தமிழர்களை இனப்படுகொலை செய்து இன்று வரை தமிழர்களின் தோளின் மீது ஏறி ஆட்சி செய்து வருகிறது திராவிடம் . இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழர் பண்பாட்டை தனதாகிக் கொண்டு தமிழர்களின் பெருமையை தன்னுடைய பெருமை என்று இந்தியா முழுவதும் நம்ப வைத்துக் கொண்டு வருகிறது ஆரியம் . ஆரியத்தை சூழ்ச்சிக்கு துணை போகிறது திராவிடம். ஆரியம் வெளிப்பகை. திராவிடம் உட்பகை. ஆரியம் சார்புண்ணி, திடவிடம் ஒட்டுண்ணி. இருவரும் மாற்றி மாற்றி தமிழர்களின் தலைமேல் மிளகாய் அரைத்துக் கொண்டு வருகிறார்கள். தாலி அறுத்து தமிழர்களின் மானத்தை காப்பதாக திராவிடம் நாடகமாட , தாலி அறுப்பதை கண்டித்து தமிழர்களின் மானத்தை காப்பதாக நாடகமாடுகிறது ஆரியம். தமிழினப் பகைவர் இருவரும் தமிழ் மண்ணில் மோதிக் கொண்டு தங்கள் ஆளுமையை நிலைநிறுத்தப் போராடுகிராகள் . வழக்கம் போல தமிழர்கள் யார் பக்கம் நிற்பது என்று குழப்பத்தில் தள்ளிவிடப்பட்டுள்ளனர். ஆரியத்தை இம்மண்ணில் வேரூன்ற வைக்க திராவிடம் போராடுகிறது. திராவிடத்தை இம்மண்ணில் மேலும் தக்க வைக்க ஆரியம் போராடுகிறது . இரு பகைவர்களுக்கும் பொதுவான தளம் தமிழ் மண்ணே . பொதுவான ஏமாளி தமிழர்களே . 

தமிழர்கள் நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் திராவிடமும் ஆரியமும் மட்டுமே தமிழ் மண்ணில் எஞ்சி நிற்கும். இவர்கள் பக்கம் சாராமல் எப்போது இவர்கள் இருவரையும் நாம் எதிர்க்கிறோமோ அப்போது தான் இவர்கள் சண்டை போட்டுக் கொள்ளும் நாடகத்தை நிறுத்துவர்கள். இவர்கள் இருவரையும் தமிழ் மண்ணை விட்டு துரத்தாமல் தமிழர்களுக்கு விடிவு இல்லை. தமிழர்கள் பொது எதிரியான திராவிடத்தையும் ஆரியத்தை வீழ்த்த உடனடியாக அணிதிரளவேண்டும். இல்லையெனில் பல முள்ளிவாய்க்கால் தமிழகத்தில் நாம் பார்க்க நேரிடும்.  


  
[vuukle-powerbar-top]

Recent Post