Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புழல் சிறையில் இருந்து தமுக தலைவர் அதியமான் மற்றும் தமுக பாலன் அவர்களும் , தமிழர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த குமாரவேல் மற்றும் கண்ணன் அவர்களும் பிணையில் வெளி வந்தனர்.

ஆந்திராவில் தெலுங்கு காவல்துறையால் தமிழர்கள் கொல்லப்பட்ட நிகழ்வை அடுத்து ஆந்திரா செல்லும் பேருந்துகளை தமிழர் முன்னேற்றக் கழகத்தை சேர்த்தவர்கள் அடித்து நொறுக்கினர். இதை ஒட்டி தமுக தலைவர் அதியமான் அவர்களும் , தமுகவை சேர்ந்த பாலன் அவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதே போல தமிழர்கள் படுகொலையை கண்டித்து தமிழர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த குமாரவேல் மற்றும் கண்ணன் ஆகியோர் ஆந்திர முதல்வரின் ஹெரிடேஜ் அங்காடியை அடித்து நொறுக்கினார். இவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இனத்திற்க்காக சிறை சென்ற இந்த நால்வரும் இன்று மாலை புழல் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்துள்ளனர். இவர்களுக்கு சிறையின் வெளியே காத்திருந்த உணர்வாளர்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்தனர்.  சிறையில் இருந்து மீண்ட போராளிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். இவர்கள் அனைவரையும் நாம் வாழ்த்துவோம், பாராட்டுவோம்.



[vuukle-powerbar-top]

Recent Post