Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர் பண்பாட்டு திருவிழாவான பிரண்டை திருவிழாவிற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும். குடும்பத்துடன் வருகை தர வேண்டும். தமிழர்கள் மிகப்பெரிய அறிவுக்கு சொந்தக்கார்கள் என்பதை தமிழர்கள் உணர வேண்டுமெனில் தமிழர்களின் பாரம்பரிய உணவு, மருத்துவம், கலைகள், உடற்பயிற்சி முறைகள், விளையாட்டுகள் அனைத்தையும் நாம் மீட்க வேண்டும். இவை அனைத்தையும் தமிழர் வாழ்வியலில் கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும். இத்தகைய முயற்சியை நாம் மேற்கொள்ள நமக்கு வழிகாட்டுகிறது இந்த பிரண்டைத் திருவிழா. சென்னையில் நடக்க உள்ள இத்திருவிழாவில் கலந்து கொண்டு தமிழர்கள் மறந்த பல தகவல்களை நாம் அறிந்து கொள்ளலாம். செந்தமிழன் ஒருங்கிணைப்பு செய்துள்ள இத்திருவிழா வெற்றிபெற நாம் உறுதுணையாக இருப்போம். தமிழர் வாழ்வு சிறக்கட்டும். தமிழர் பண்பாடு உயரட்டும் !
------------------------------------------------------------------------------------

பிரண்டைத் திருவிழாவில் ஊர்ச் சந்தை!

நண்பர்களே,
கிராமச் சந்தையைச் சென்னையில் அமைக்கும் பணியைப் பிரண்டைத் திருவிழாவில் செய்துள்ளோம். நிகழ்ச்சி நடக்கும் திடலில் உள்ள மரங்களின் நிழலில், உணவுப் பொருட்கள், பலகாரங்கள், காய்கறிகள், மரப்பாச்சி பொம்மை , பனைப் பொருட்கள், கோரைப் பாய் தட்டிகள் போன்ற கைவினைப் பொருட்களுக்கான கடைகள் அமைக்கப்படுகின்றன.

எந்த ஒரு பெரிய நிறுவனத்தின் (branded) தயாரிப்புகளும் சந்தையில் அனுமதிக்கப்படவில்லை. வாடகைக்குக் கூட பெரிய நிறுவனங்களின் கடைகளை அனுமதிக்கவில்லை.

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட குதிரைவாலி, சாமை, தினை உள்ளிட்ட சீர் தானியங்களும் பலவகையான அரிசிவகைகளும் நம் சந்தையில் குவிகின்றன. இன்னும் ஏராளமான மரபுவழிப்பட்ட பொருட்கள் விற்பனைக்காக வந்து சேர்ந்துகொண்டுள்ளன.

செம்மை வெளியீட்டகம் மற்றும் மரபுவழி நூல்களை வெளியிடும் பிற பதிப்பகங்களின் நூல்கள் மட்டும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
உங்கள் இல்லங்களுக்குத் தேவையான கைவினைப் பொருட்கள் முதல் காய்கறிகள் வரைக்கும் பிரண்டைத் திருவிழாவில் கிடைக்கும். இந்தப் பொருட்கள் யாவும் நமது கிராமங்களில் உள்ள மரபுவழித் தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படுபவை.

பிரண்டைத் திருவிழாவில் பொருட்களை வாங்குவதற்காக நீங்கள் செலவிடும் தொகை, நமது சமூகத்திற்குச் சென்று சேரும். ஆகவே, பொருட்களை வாங்கும் நிலையில் வாருங்கள் என அழைக்கிறோம்.

குறிப்புகள்: 1. துணிப் பைகள் அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. ஆனாலும், இயன்றவரை உங்கள் வீட்டிலிருந்தே பைகளைக் கொண்டு வாருங்கள்.

2. செம்மை விற்பனைக் கடைகளில் விற்கப்படும் தானியங்கள் கிலோ கணக்கில் அல்லாமல், படிக் கணக்கில் விற்கப்படும். காய்கறிகள் கூறுகளாக விற்கப்படும். 
[vuukle-powerbar-top]

Recent Post