Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆந்திராவில் இழந்த தமிழர் நிலத்தை மீட்பதே தமிழர்களுக்கு பாதுகாப்பு : தமிழர் படுகொலையை கண்டித்து நடத்திய உண்ணா நிலைப் போராட்டத்தில் அருகோ பேச்சு !! 

ஆந்திராவில் தெலுங்கின வெறி படித்த காவல்துறையால்  இருபது தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணா நிலைப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள் வருமாறு 

தமிழர் படுகொலைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும். தெலுங்கு அரசுக்கு துணை போகும் ஆளுநர் ரோசையாவை பணி நீக்கம் செய்ய வேண்டும். தமிழர் படுகொலையை நடுவண் புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும். கொல்லப்பட்ட தமிழர் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ஆந்திர அரசிடம் இருந்து பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆந்திர சிறையில் உள்ள 3000 தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலான கோரிக்கை வைத்து போராட்டம் நடைபெற்றது . 

போரட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எழுகதிர் ஆசிரியர் அருகோ அவர்கள் , திராவிட அரசியல் வாதிகளின் சூழ்ச்சியால் தமிழர்கள் இழந்த பகுதிகளை மீட்க வேண்டும் என்றும் அதற்கான போராட்டங்களை தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும் என்று கூறினார் . மேலும் ஆந்திராவில் உள்ள சித்தூர் பகுதியில் தமிழர்கள் பெரும்பாமையாக வாழ்கிறார்கள் . அவர்கள் தமிழகத்தோடு இணைந்து வாழவே விரும்புகிறார்கள் . அவர்கள் விருப்பத்திற்கு இணங்க சித்தூர் பகுதியை தமிழகத்தோடு இணைக்க தமிழக அரசு சட்டமன்ற தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் . இப்பகுதிகளை தமிழகத்தோடு இணைத்தால் மட்டுமே தமிழர்கள் அங்கு பாதுகாப்போடு வாழ முடியும் . இல்லையெனில் ஆந்திர அரசின் தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார். 

தமிழகத்தை இன உணர்வுள்ள தமிழர்கள் ஆளும் போது தான் தமிழகத்தில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ முடியும் என்ற கருத்தை வந்திருந்த அனைவரும் முன்வைத்தனர், தமிழகத்தில் தெலுங்கர்களின் ஆதிக்கத்தையும் திராவிட அரசியலையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற குரலும் ஓங்கி ஒலித்தது . 

இப்போராட்டத்தில் அதியமான் தமிழர் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் அய்யா சக்திவேல் மக்கள் மாநாட்டு கட்சி போராட்டத்தை துவக்கி வைத்தார் . 

இராஜ்குமார் பழனிச்சாமி செய்தி தொடர்பாளர், தமிழ் தேசிய கூட்டமைப்பு. வேலுமணி தமிழர் எழுச்சி இயக்கம், அருகோ எழுகதிர் ஆசிரியர், கணேசன் தமிழர் பேரரசு கட்சி,  அக்னி தமிழ் தேசிய கூட்டமைப்பு, பாரிசாலன் தமிழர் உலகம்,  சீதையின் மைந்தன் கட்சத்ச தீவு மீட்பு இயக்கம், அன்வர் பாலசிங்கம் கேரள தமிழர் கூட்டமைப்பு, தமிழ் மணி தமிழ் தேசிய குடியரசு கட்சி வெற்றியரசன் இந்திய சுதந்திர கட்சி  சண்முகம் செ மா பொ, சேகர் தெ.செ.மே.மா.பொ, த.மு.க மொகமத் சுகைல் மா.அ.செ தமிழர் முன்னேற்றக் கழகம், பாவலர் ராமச்சந்திரன் தமிழ்த் தன்னுரிமை இயக்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்  

உண்ணாநிலை போராட்டத்தை  தமிழர் களம் தலைவர் அரிமாவளவன் அவர்கள் பழரசம் கொடுத்து முடித்து வைத்தார். 


[vuukle-powerbar-top]

Recent Post