Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிறுவன் தமிழரசனின் மரணத்திற்கு நம் ஆழ்ந்த இரங்கல் ! இன்னும் ஆழ்துளை கிணறுகளை முறைப்படுத்த தவறிய அரசு நிர்வாகத்திற்கு நம் கண்டனங்கள் !

வேலூர் மாவட்டத்தில் தமிழரசன் என்ற சிறுவன் ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான். 9 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசன் மரணித்தான். தமிழரசன் என்ற அருமையான பெயர் கொண்ட சிறுவன் வருங்காலத்தில் தமிழினத்திற்கு குரல் கொடுக்கும் போராளியாகக் கூட வரக்கூடும். ஆனால் பெரியவர்களின் கவனக் குறைவால் இந்தக் குழந்தையை தமிழினம் இப்போது இழந்து நிற்கிறது. யார் இதற்கு பொறுப்பேற்கப் போகிறார்கள் ?

சென்ற முறை ஆழ்துளை கிணற்றில் சிறுவன் ஒருவன் விழுந்து மரணித்த போது மாவட்ட ஆட்சியர் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக கூறினார் . ஆனால் மீண்டும் மீண்டும் இப்படியான துன்பவியல் நிகழ்வுகள் நடக்கிறது. தமிழக அரசு எல்லா மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக கடுமையான சட்டங்களை வகுத்திருந்தால் இத்தகைய நிகழ்வுகளை தடுத்திருக்கலாம். மாவட்ட ஆட்சியர் இதற்கு  முழுப் பொறுப்பேற்க வேண்டும். இப்படியான நிகழ்வுகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விதிமுறை இயற்ற வேண்டும். தமிழரசனின் மரணமே கடைசி ஆழ்துளை மரணமாக இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் உறுதி செய்வோம். அரசு நிர்வாகத்தை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும்.  




[vuukle-powerbar-top]

Recent Post