Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் ஆந்திரா வங்கி . ஏன் தமிழ்நாடு  வங்கிகள் இல்லை ?

அண்மையில் ௨௦ தமிழர்கள் கொல்லப்பட்ட நிகழ்வை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இப்போராட்டத்தில் அதிக அளவில் ஆந்திர வங்கிகள் முற்றுகையிடப் பட்டன. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஆந்திரா வங்கிகள், பணம் வழக்கும் நிலையங்கள் இருக்கும் காரணத்தால் தமிழின போராளிகள் ஆந்திர வங்கிகளை முற்றுகையிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். ஒரு கட்டத்தில் போராட்டங்களின் தொல்லை தாங்க முடியாத ஆந்திர வங்கி நிர்வாகத்தினர் , இந்த வங்கி ஆந்திர அரசின் வங்கி அல்ல என்றும், இது இந்திய அரசுக்கு சொந்தமான வங்கி என்றும் , இதில் வேலை செய்பவர்கள் தமிழர்களே என்றும் தகவல் எழுதி வெளியே தொங்கவிட்டனர்.

சரி , ஆந்திர வங்கிகள் அனைத்தும் இந்திய அரசின் வங்கிகள் தான். ஆனால் ஏன் தமிழகத்தில் அதிக அளவில் இவை அமைந்துள்ளன? இதற்ககு முக்கிய காரணம் இந்த வங்கிகள் தமிழகத்தில் உள்ள பெருமளவிலான தெலுங்கு முதலாளிகளை குறி வைத்தே தொடங்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிதல் வேண்டும். அதிக அளவிலான தெலுங்கு வணிகர்களை, முதலீட்டை ஈர்ப்பதற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆந்திர  வங்கிகளை திறந்து தெலுங்கு மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது ஆந்திர வங்கிகள் . இதில் வேலை பார்ப்பவர்கள் கூட தங்கள் வாடிக்கையாளர்களிடம் தெலுங்கில் உரையாடுவதை நாம் கேட்க இயலும். இதே போல State bank of Travancore, Catholic Syrian Bank, Karnataka Bank, State Bank of Hyderabad, Alahabad Bank, Punjab National Bank என ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் வங்கிகளை இந்திய அரசு தொடங்குகிறது . ஆனால் தமிழர்களுக்காக , தமிழ் மக்களுக்கு சேவை செய்வதற்கு எந்த மாநிலத்திலும் தமிழ்நாடு வங்கிகளை இந்திய அரசு தொடங்கவில்லை. இது ஏன் என்று தமிழக அரசோ, அரசியல் கட்சிகளோ கேட்கவில்லை. தமிழக அரசு தமிழர்களின் கைகளில் இல்லாமல் தமிழர் அல்லாதவர்களின் கைகளில் இருப்பதால் தமிழர்களுக்கான வங்கி சேவைகளை கூட நம்மால் பெற முடிவதில்லை . நம் உரிமைகளோடு வாழ இயலவில்லை. தமிழ்த் தேசிய இனம் தமிழர்களால் நடத்தப்பட்டு தமிழ்த் தேசிய அரசியல் மலரும் போது தான் நமக்கான அடையாளத்தை கூட நம்மால் தக்க வைக்க இயலும் என்பதை வங்கி எடுத்துக்காட்டின் மூலமாகவும் நாம் அறியலாம்.










[vuukle-powerbar-top]

Recent Post