Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இது தமிழர்களுக்கான பதிவு. திராவிடர்கள் தவிர்க்கவும் !

திராவிடத் தந்தை ஈ.வே.ராவை தமிழர்களின் வழிகாட்டியாக என்றைக்குமே நாம் ஏற்க இயலாது.

நாம் தமிழர் கட்சி தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கி விட்டனர். திராவிடத் தந்தையை தங்கள் வழிகாட்டியாக அவர்கள் ஏற்கின்றனர் என்றும் அதனால் ஈ.வே.ராவை இனி விமர்சனம் செய்யக் கூடாது என்றும் கட்சியின் தலைமை கட்டளையிட்டுள்ளது. இது அவர்களின் நிலைப்பாடு, கொள்கை முடிவு.  இதன் மூலம் திராவிடத் தந்தை இம்மண்ணில் உருவாக்கிய திராவிடக் கருத்தியலையும் இனி நாம் தமிழர் கட்சி விமர்சனம் செய்ய இயலாது.

ஆனால், எமது மண்ணிற்கும், மொழிக்கும், இனத்திற்கும், பண்பாட்டிற்கும் பெரும் தீங்கு இழைத்த திராவிடக் கோட்பாட்டையும், இக்கோட்பாடுகளை உருவாக்கிய திராவிடத் தந்தையையும் விமர்சிக்காமல், ஆய்வுக்கு உட்படுத்தாமல் தமிழ்த் தேசியத்தை தமிழகத்தில் நிலைநிறுத்த முடியாது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். திராவிட எதிர்ப்பு என்பது மேம்போக்காக இல்லாமல் ஈ.வே.ரா என்ற புள்ளியில் இருந்தே நாம் திராவிடத்தை எதிர்க்கிறோம், தமிழ்த் தேசியத்தை கட்டமைக்க முயல்கிறோம். இதுவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடு.

திராவிட எதிர்ப்பாளர்களும், ஈ.வே.ராவை வழிகாட்டியாக, தந்தையாக ஏற்காதவர்களும், திராவிடம் சாராத தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க எங்களுடன் இணையலாம். நமக்கான சமரசமில்லாத அரசியல் தளத்தை நாமே உருவாக்குவோம். திராவிடத்தை எதிர்க்காமல், தூக்கி எரியாமல் தமிழகத்தில் எந்த அரசியல் மாற்றத்தையும் நாம் உருவாக்கிவிட முடியாது. திராவிடத்தால் வீழ்ந்து போன தமிழினத்தை தமிழ்த் தேசியத்தால் எழுப்புவோம். வாழ்க தமிழ்! 
[vuukle-powerbar-top]

Recent Post