Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ் மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய தமிழக முதல்வருக்கு பாராட்டுகள் !!

தில்லியில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் தமிழ் மொழியை உயர்நீதி மன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் பன்னீர் செல்வம் நடுவண் அரசை வலியுறுத்தி உள்ளார். இது தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். முதல்வரின் இந்த நடவடிக்கையை வரவேற்கும் அதேவேளையில் , தமிழகத்தின் எல்லா துறைகளிலும் தமிழ் மொழி ஆட்சி மொழியாக பண்படுத்தப்படுகிறதா என்பதை தமிழக அரசு சிந்திக்க வேண்டும். இந்திய ஆட்சி மொழி சட்டம் , தமிழகத்திற்கு பொருந்தாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள நடுவண் அரசு நிறுவனங்களில் இன்னும் தமிழுக்கு இடமில்லை , இந்தி மொழியே அலுவல் மொழியாக பயன்படுத்தப் படுகிறது என்பது விதிமுறை மீறலாகவே உள்ளது. இதை தட்டிக் கேட்க வேண்டிய தமிழக அரசு இதுவரை தட்டிக் கேட்கவில்லை. தமிழகத்தில் உள்ள நடுவண் அரசு நிறுவனங்களில் தமிழை கொண்டு வர எந்த முயற்சியும் இந்த திராவிட அரசுகள் மேற்கொள்ளாத காரணத்தால் தொடர்வண்டித் துறை, விமான நிலையங்கள், அஞ்சல்துறை என எவற்றிலும் தமிழ் மொழி இல்லாமல் போனது .

இனியாவது தமிழக அரசு துணிவுடன் இந்திய அரசை தட்டிக் கேட்க முன்வர வேண்டும். தமிழை நடுவண் அரசின் ஆட்சி மொழியாக்க சட்டமன்ற தீர்மானம் இயற்ற வேண்டும். தமிழகத்தில் உள்ள இந்தி அரசின் நிறுவனங்களில் தமிழே அலுவல் மொழியாக பண்படுத்த வேண்டும் , இல்லையென்றால் இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் இயங்க அனுமதி அளிக்க மாட்டோம் என்று அழுத்தமாக குரல் எழுப்ப வேண்டும் தமிழக அரசு. தமிழ் மொழியின் உரிமையும் , தமிழர்களின் வேலை வாய்ப்பு உரிமையையும் தமிழக அரசு உடனே உறுதி செய்தல் வேண்டும் என்று கோரிக்கையை தமிழக அரசுக்கு முன்வைக்கிறோம் .





[vuukle-powerbar-top]

Recent Post