Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தின் அருகிலேயே தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக முதல்வரோ , தமிழக அமைச்சர்கள் குழுவோ ஏன் நேரில் சென்று பார்க்கவில்லை ?

ஈழத்தில் நம் உறவுகள் கொல்லப்பட்ட போதும் நாம் கையறு நிலையில் இருந்தோம். இந்திய அரசை எதிர்பார்த்திருந்தோம். இந்திய அரசுக்கு எதிராக பல போராட்டங்களை அப்போதைய தமிழக அரசும் முன்னெடுத்து நம்மை ஏமாற்றியது. ஒரு மாநில அரசால் இதை விட வேறேதும் செய்ய முடியாது என கையை விரித்து. இப்போது உள்ள தமிழக அரசும் அதே போல கையை விரிப்பது நியாயமா ? தமிழர்களை இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த திராவிடர்கள் தமிழகத்தை அரசியல் பலமில்லாத நிலையில் தள்ளி விட்டுள்ளது. தமிழர்களுக்கான அரசாக இந்த திராவிட அரசுகள் குரல் கொடுக்கவும் தவறி விட்டது.

மலையாளிகளுக்கோ, தெலுங்கர்களுக்கோ இப்படியான துயரம் நடந்திருந்தால் அவர்கள் நடுவண் அரசை உலுக்கி இருப்பார்கள். அவர்களின் முதல்வர்கள் படுகொலை நடந்த இடத்தையும், பலியானவர்களையும் நேரில் சென்று பார்த்திருப்பார்கள் . ஆனால் தமிழகத்தில் உள்ள முதல்வர் ஒரு கடிதம் எழுதி தனது கடமையை நிறைவேற்றி உள்ளார் .  அதுவும் தமிழகத்தில் இத்தனை போராட்டங்கள் நடந்த பின்பு தான் இது நடந்துள்ளது . தமிழர்கள் இனியும் விழிக்கவில்லை என்றால் தமிழக அரசு முற்றிலும் தமிழர்களுக்கு எதிரான அரசாக திரும்பும் நிலை ஏற்படும். பிறகு தமிழகத்திற்கே வந்து வெளி மாநிலத்தவர்  தமிழர்களை சுட்டு வீழ்த்தினாலும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது.

தமிழக அரசு தமிழர்களுக்கான அரசாக செயல்பட வேண்டும் . அல்லது ஆளும் அதிமுக அரசு, தமிழக அரசாக இருப்பதில் இருந்து  விலக வேண்டும். பலியான தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், இந்த படுகொலையில் ஈடுபட்ட நபர்களின் மீது பொது விசாரணை நடத்தவும் தமிழக அரசு உடனே ஆவன செய்தல் வேண்டும். பலியான நபர்களின் குடும்பத்தை தமிழக முதல்வர் நேரில் சந்தித்து ஆறுதல் வழங்க வேண்டும். இதை செய்யத் தவறினால் அதிமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.






[vuukle-powerbar-top]

Recent Post