Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்த் திரைத் துறையில் தமிழர் அல்லாதவர்களின் ஆதிக்கத்தை கண்டித்து நடத்தப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க உண்ணாநிலைப் போராட்டம் !!

இன்று தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் ஒருங்கிணைப்பு செய்த தமிழ்த் திரையுலகில் தமிழர் அல்லாதவர்களின் ஆதிக்கத்தை கண்டிக்கும் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. பல்வேறு தமிழ் அமைப்புகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டன . இப்போராட்டம் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம் என்று சொல்லப் படுவதற்கு காரணம் , தமிழ்த் திரையுலகில் தமிழர்களின் ஆளுமை இல்லாத நிலையில், வேற்றின மக்களே  இன்னும் ஆளுமை செய்வதை கண்டித்து நடத்தப்படும் முதல் போராட்டம் இதுவே ஆகும்.

ஆனால் இப்படியான போராட்டத்திற்கு தமிழ்த் திரையுலகை சார்ந்த நடிகர்கள் எவரும் வரவில்லை  என்பது தான் வேதனையான விடயம் . திரைப்படத் துறையில் பணியாற்றும் சிலர் மட்டுமே இப்போராட்டத்தின் தன்மை அறிந்து இதில் கலந்து கொண்டனர் . அதில் ஒருவர் கூறும் போது, தமிழ்த் திரையுலகில் பணம் படைத்த தமிழர்கள் யாரும் இல்லாத காரணத்தால் தமிழர்கள் அனைவரும் தமிழர் அல்லாதவர்களின் உதவியைத் தான் நாடி நிற்க வேண்டி உள்ளது . அதனால் தான் தமிழர்கள் யாரும் திரைப்படத் துறையில் தமிழர் அல்லாதவர்களை கண்டிக்க முன்வரவில்லை என்று தன்னுடைய வேதனையை வெளிபடுத்தினார் .

திரைப்படத் துறையில் நுழைந்த பல்வேறு தமிழர் அல்லாதவர்கள் இப்போது அசுர வளர்ச்சி பெற்றுள்ளனர் . நாளை அவர்களே தமிழகத்தின் அரசியல் தலைமையை கைப்பற்றக் கூடும் . இன்று விஜயகாந்த் எதிர்க் கட்சி தலைவர் என்றால் நாளை விசால் எனும் நடிகர் எதிர்க்கட்சி தலைவராக வருவார் . தொடர்ந்து தெலுங்கர்கள் அரசியல் தலைமைகளை கைப்பற்றினால் தமிழர்கள் எப்போதும் அடிமையாகவே இருக்க நேரிடும் என்ற கருத்து ஆழமாக இப்போராட்டத்தில் முன்வைக்கப்பட்டது. தமிழகத்தில் அரசியலில் தமிழர்கள் ஆளுமை செலுத்த முடிவதில்லை . திரைத்துறையில் ஆளுமை செய்ய முடிவதில்லை , வணிகத்தில் ஆளுமை செய்ய முடிவதில்லை . எப்படியாக எல்லா துறைகளிலும் தமிழர்கள் புறக்கணிப்பட்டு , தமிழர் அல்லாதவர்களே தமிழர்களின் தலையெழுத்தை தீர்மானிக்கின்றனர் . தமிழர்கள் எத்தகைய போராட்டங்களை செய்ய வேண்டும் என்பதையும் தமிழர் அல்லாதவர்களே முடிவு செய்கின்றனர் .

இந்த அடிமை நிலையில் இருந்து தமிழர்கள் வெளியேற திராவிட கருத்தியலையும் , திராவிட அரசியலையும் , திராவிட வணிகத்தையும் , திராவிட ஆளுமையையும் எதிர்த்து தமிழர்கள் போராடியே ஆக வேண்டும் என்ற கருத்தை வந்திருந்தவர்கள் அனைவரும் முன் மொழிந்தனர். சாதியாக நம்மை பிரித்து இத்தனை காலம் தமிழர்களின் முதுகின் மீது ஏறி பிழைப்பு நடத்தும் திராவிடத்தை தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைத்து தோற்கடிக்க வேண்டும் என்ற செய்தியும் ஆழமாக பதியப்பட்டது. தமிழர்கள் இப்போது விழிப்படைந்து விட்டனர் . இனியும் தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்த முடியாது என்பதையும் இப்போராட்டம் நமக்கு உணர்த்தி உள்ளது. இப்போராட்டத்தை ஒருங்கிணைத்த தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்திற்கு நம் பாராட்டுகள்.


[vuukle-powerbar-top]

Recent Post