Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆந்திர அரசுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசு ! தமிழர்கள் கண்டிக்க வேண்டியது ! 

தமிழர்களின் மீது தெலுங்கு இனவெறி நடத்திய படுகொலைக்கு எதிராக தமிழர்கள் கடும் போராட்டங்கள் நடத்திவரும் வேளையில் இப்போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்கி வருகிறது தமிழக அரசு. 

அண்மையில் ஆந்திர முதல்வரின் கடையை அடித்து நொறுக்கிய தமிழர் எழுச்சி இயக்க தோழர்கள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது தமிழக காவல்துறை. இருப்பினும் தமிழர்கள் மீதான அடக்குமுறையை தமிழக அரசு நிறுத்தவில்லை. தெலுங்கர் ஆளுநர் ரோசையா வழிகாட்டுதலின்படி தமிழக அரசு இப்போது ஆந்திர அரசுக்கு பம்பரமாக வேலை செய்து வருகிறது . யாரெல்லாம் ஆந்திர அரசுக்கு எதிராக போராடுகிறார்களோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆளுநர் ரோசையா உத்திரவிட்டுள்ளார் . சந்திரபாடு நாயுடு கடை தாக்குதலில் ஈடுபட்ட தமிழர் எழுச்சி இயக்கத்தின் மீது தமிழக காவல்துறை மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி விட்டது. இருவர் சிறை சென்ற நிலையில் மேலும் எட்டு பேர் மீது பொய் வழக்குகள் தாக்கல் செய்ய உள்ளது தமிழக ஏவல் துறை . இவர்கள் தமிழக காவல்துறையா அல்லது ஆந்திர காவல்துறையா என்பது தெரியவில்லை . அதிமுக அரசுக்கும் திட்டத்திட்ட தெலுங்கர்களுக்கு ஆதரவான அரசாகவே செயல்பட தொடங்கி விட்டது . இப்படியான அவல நிலையில் இப்போது தமிழ் மக்கள் இருப்பது தான் வேதனையான விடயம். திராவிடம் தமிழர்களுக்கு செய்த தீங்கே இத்தகைய தமிழின எதிர் அரசியலுக்கு காரணமாக அமைந்துள்ளது. 

எனினும் நாம் போராடாமல் இருக்க முடியாது. தமிழக அரசின் ஒடுக்குமுறையை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும் . காவல்துறையின் பொய் வழக்குகளை நாம் முறியடிக்க வேண்டும் . இந்த நேரத்தில் நாம் தமிழர் எழுச்சி இயக்கத்திற்கு துணை நிற்போம். இன்று மாலை 5 மணிக்கு ஈ 1 காவல் நிலையத்தில் தமிழர் எழுச்சி இயக்கத்துடன் தமிழின உணர்வாளர்கள் ஒன்று கூட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். நமக்கான நீதியை நாம் தான் கேட்ட்க வேண்டும். நேரில் வந்து ஆதரவு தர விரும்பும் தோழர்கள் தொடர்பு கொள்ளவும் . 







[vuukle-powerbar-top]

Recent Post