Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ரயில் பயணிகளுக்கு ஓர் எச்சரிக்கை:

ரயில் முன்பதிவிற்கு அடையாள அட்டையாக PAN நம்பரை தெரிவிப்பவரா நீங்கள்..??

கட்டாயம் இதைப் படியுங்கள்...!!

நீங்கள் உங்கள் முன்பதிவிற்கு PAN நம்பரைத் தரும்போது அது சில விஷமிகளால் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

நீங்கள் பயணிக்கும் பெட்டியின் வெளிப்புறப் பகுதியில் ரயில்வே நிர்வாகம் முன்பதிவு செய்திருப்பவர்களின் பெயர், பாலினம், முகவரி, வயது, அவர்கள் ஆன்லைன் மூலம் பயண முன்பதிவு செய்திருந்தால், அவர்களின் புகைப்பட அடையாள அட்டை எண், முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை எண் ஆகியவற்றை ஒட்டி வைத்திருக்கும்.

முன்பதிவின் போது நீங்கள் PAN நம்பரை கொடுத்திருந்தால், உங்கள் PAN நம்பர் மற்றும் உங்கள் பெயர், முகவரி, வயது ஆகியவை அந்த பெட்டியில் ஒட்டபட்ட தாளில் இருக்கும்.

இங்கு தான் பிரச்சனையே..!! எப்படி..??

தங்கம் வாங்கும் பொழுது 2 இலட்ச ரூபாய்க்கு மேல் வாங்கினால் PAN நம்பர் தேவை.

இதனால் சில பெரிய முதலீட்டாளர்களுக்குப் பினாமியாக செயல்படும் நகை விற்பனையாளர்கள் ரயில் பெட்டியில் நீங்கள் கொடுத்திருக்கும் விவரங்களை பயன்படுத்துவது இப்போது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் ஒருவர் ரயில் நிலையத்தில் PAN நம்பர் கொடுத்திருக்கும் பயணிகளின் விபரங்களை சேகரித்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது ஒரு விபரத்திற்கு ரூ.10/- அவருக்கு நகை விற்பனையாளர்கிளிடமிருந்து கிடைப்பதாக கூறியுள்ளார்.

குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் விபரங்களை மாத்திரமே அவர் அதிகமாகச் சேகரிப்பதாகவும் கூறியுள்ளார். அதுவும் Sleeper Class-ல் கிடைக்கும் விபரங்களை மட்டும் சேகரிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

ஏனென்றால் Sleeper Class-ல் பயணிப்பவர்கள் பெரும்பாலும் PAN கார்டு வைத்திருப்பவர்களாகவும், வேலைக்கு செல்பவர்களாகவும்தான் இருப்பார்கள் என்ற அனுமானத்தாலும் இவ்வாறு சேகரிப்பதாக கூறியுள்ளார்.

எனவே ரயில் பயணிகளே, உங்கள் விபரங்கள் இது போல் பயன்படுத்தப்பட்டால் வருமானவரித்துரையிடமிருந்து உங்களுக்குதான் பிரச்சனை வரும்.

ஆகையால் ரயிலில் பயணம் செய்யும் பொழுது Voter ID, Driving License (அ) Ration Card போன்றவற்றை அடையாள அட்டையாகப் பயன்படுத்தவும். கூடுமானவரை, PAN கார்டைத் தவிர்க்கவும்.

முழுமையாகப் படித்ததற்கு நன்றி! இந்தத் தகவல் பயனுள்ளதென நீங்கள் கருதினால், உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளவும்.


[vuukle-powerbar-top]

Recent Post