Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விடுநர் 
அதியமான் 
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 

பெறுனர் 
காவல்துறை ஆய்வாளார் 
மேற்கு மாம்பலம் காவல் நிலையம் 
சென்னை 

மதிப்பிற்குரிய ஐயா வணக்கம் , 

வரும் மே 17 ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்று மேற்கு மாபலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் மாலை 4 முதல் 8 மணி வரை ஈழப் படுகொலைக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த உள்ளோம். சென்ற ஆண்டும் இதே போன்ற நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல்லாயிரம் ஈழத் தமிழ் உறவுகள் கொல்லப்பட்ட இந்த நாளில் உலகத் தமிழர்கள் யாவரும் அவர்கள் இருப்பிடங்களில் இறந்த சொந்தங்களுக்கு நினைவேந்தல் செய்வது வழக்கமாகவும் உள்ளது. அந்த வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்கிறது . காவல்துறை இந்த நிகழ்விற்கு அனுமதியும் ஆதரவும் நல்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் . 

இப்படிக்கு 
நன்றியுடன் 
க. அதியமான் 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 
[vuukle-powerbar-top]

Recent Post