Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழினத்தின் கருப்பு நாளாக கருதப்படும் மே 18 ல் தமிழீழ மக்கள் விடுலை அடையவும் உலகத் தமிழர்களின் வாழ்வு சிறக்கவும் உறுதி ஏற்போம் !!

2009 தமிழீழத்தில் நடைபெற்ற மாபெரும் இனப்படுகொலை முடிந்து இந்த ஆண்டோடு ஆறு ஆண்டுகள் ஆகிறது. இருப்பினும் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நன்மைகளும் ஈழத்தமிழர்களுக்கு கிடைக்கவில்லை. இந்திய அரசும் சிங்கள அரசுக்கு ஆதரவாகவே இன்று வரை நடந்து வருகிறது. இனப்படுகொலைக்கான பல்வேறு சாட்சிகள் நமக்கு கிடைத்தாலும் , இதற்கான நீதியை பெற்றுத் தர சர்வதேச நாடுகள் தவறிவிட்டது. மேலும் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளும் இன்றுவரை மறுக்கப்பட்டே வருகிறது. ஈழத்தமிழர்களுக்கான குறைந்த பட்ச காவல்துறை மற்றும் காணி உரிமைகள் கூட கிடைக்கவில்லை. சிங்கள ராணுவம் ஈழத்தில் இருந்து வெளியேறவில்லை. ஒரு இனப்படுகொலைக்கு நம்பகமான சர்வதேச விசாரணையும், தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பும் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவே உள்ளன.

தமிழக அரசு இதற்கான சட்டமன்ற தீர்மானம் இயற்றினாலும் , அதை கடந்து தமிழக அரசால் ஒன்று செய்ய இயலவில்லை. தமிழீழ தமிழக பகுதியின் நடுவே ஒரு கடல்வழிப் போக்குவரத்தை கூட தொடங்க தமிழக அரசால் முடியவில்லை . தமிழகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாம்களை தமிழக அரசால் மூட முடியவில்லை. இங்கிருக்கும் ஈழ மக்களுக்கு குடியுரிமை பெற்றுத் தர முடியவில்லை. இங்குள்ள ஈழத் தமிழர்கள் தமிழக மக்களை போல உரிமைகள் பெற்று சுதந்தரமாக வாழ முடியவில்லை. தமிழகத்தில் சிங்கள வணிகத்திற்கு தடை போட முடியவில்லை. இவற்றையெல்லாம் தமிழக அரசு செய்திருக்கலாம். தமிழகத்தை ஆளும் அரசும், ஆண்ட அரசும் தமிழர் அரசாக இல்லாத காரணத்தால் ஈழத் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி என்பது எட்டாக் கனியாகவே உள்ளது.

உடனடி தேவை தமிழகத்திற்கு தமிழர் அரசும், தமிழீழத்திற்கு சிங்கள அரசின் கட்டுப்பாடு இல்லாத தனி அரசும் தான். இதற்கான முன்னெடுப்புகளை உலகத் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும். மே 18 இனப் படுகொலை நாளில் உலகத் தமிழர்கள் இதற்கான உறுதி மொழியை எடுப்போம். தமிழகத்தையும் தமிழீழத்தையும் அந்நியர்கள் கட்டுப்பாட்டில் இருந்து மீட்போம். இனப்படுகொலைக்கான நீதியை பெற விரைந்து செயல்படுவோம். இனியும் நாம் அந்நியர்களை நம்பி வீண் போக முடியாது. தமிழகத்திலும் தமிழீழத்திலும் அதிகாரமுள்ள தமிழர் ஆட்சியை நிறுவ எல்லா வழிகளிலும் பாடுபடுவோம். தமிழகத்திற்கு தமிழர் தலைமையில் தன்னாட்சி உரிமையும், தமிழீழத்திற்கு தனி அரசும் உடனடி தேவையாக உள்ளது. இதுவே நம்முடைய எதிர்கால இலக்காக வைத்து மே 18 ஆம் நாளில் உறுதி ஏற்போம். 
[vuukle-powerbar-top]

Recent Post