Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழீழம் மலர தமிழகத்தில் தமிழர் ஆட்சி தேவை ! சென்னை முகப்பேர் பகுதியில் நடைபெற்ற இனப்படுகொலை நாள் நினைவேந்தல் மற்றும் கருத்தரங்கம் !

மே 18 தமிழினத்தின் கருப்பு நாளாக வரலாற்றில் பதிவாகி இருந்தாலும் இன்று தான் உலகத் தமிழர்கள் தங்களின் தாழ்ந்த நிலையை குறித்து விழிப்புணர்வு பெற்றனர் என்பதும்் மறுக்க ிமுடியாதி ர்கள் அதிகார பலம் இல்லாமல் பல நூற்றாண்டுகள் வாழ்ந்து விட்டனர். தமிழர்களின் தாயகமாக கருதப்படும் தமிழ்நாட்டில் தமிழர் அரசு இல்லாத காரணத்தால் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை நம்மால் தடுக்க முடியாமல் போனது. கையறு நிலையில் தமிழர்கள் தள்ளப்பட்டனர். தமிழினத்தின் எதிரிகள் வெளியில் இல்லை தமிழகத்திலேயே  உள்ளனர் என்பது மே 18 ஆம் நாள் நமக்கு காட்டுக் கொடுத்தது. 

இன்று இந்த நாளில் தமிழர் முன்னேற்ற கழகம் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்காக முகப்பேர் பகுதியில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்வில் பல தமிழர்கள் கலந்து கொண்டு தங்கள் இன உணர்வை வெளிப்படுத்தினர் . தானி ஓட்டுனர், பூ விற்பவர் , குறு வணிகர்கள், பாட்டாளி மக்கள் பலரும் கலந்து கொண்டு ஈழத்து உறவுகளுக்காக சுடறேந்தி மௌன அஞ்சலி செலுத்தினர். இந்த நினைவேந்தல் நிகழ்வு அப்பகுதி வாழ் மக்களின் கவனத்தை பெரிதளவில் ஈர்த்தது. 

குறிப்பாக இந்த நிகழ்வில் தமிழர்கள் யாரால் வீழ்த்தப் பட்டோம், யாரை தமிழர்கள் வீழ்த்த வேண்டும் என்பதை பொது மக்களுக்கு காட்டும் வகையில் பாதகைகள் ஏந்தி தமிழின உணர்வாளர்கள் மக்களிடம் செய்தியை கொண்டு சென்றனர். தமிழினப் படுகொலையில் திராவிடத்தின் பங்கு என்ன என்பதை கருத்தரங்கம் மூலமாக தமிழ் ஆய்வாளர்கள் விளக்கினர். தமிழர்களை திராவிடர்கள் எந்த அளவிற்கு ஏமாற்றினர் என்பதை பற்றி நிகழ்ச்சிக்கு வந்திருந்த பேச்சாளர்கள் எடுத்துரைத்தனர். இனப்படுகொலையில் திமுக முதற்கொண்டு திராவிடக் கட்சிகளை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும், விசாரணையை தமிழகத்தில் இருந்தே தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்நிகழ்வில் முன்வைக்கப்பட்டது. கருத்தரங்கில் திரு அக்னி அவர்கள், செல்வா பாண்டியர், பெருமாள் தேவன், அதியமான், ஜலீல் மற்றும் ராஜ்குமார் பழனிசாமி ஆகியோர் தங்கள் கருத்தை முன்வைத்தனர். 

இறுதியாக தமிழீழம் அமைப்போம், திராவிடத்தைவீழ்த்துவோம், தமிழகத்தில் தமிழ்த் தேசிய அரசியலை கட்டி எழுப்புவோம் என்று அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். தமிழகத்தில் தமிழ்த் தேசிய அரசியலை 






[vuukle-powerbar-top]

Recent Post