Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

20 தமிழர்களை கொன்ற சந்திரபாபு நாயுடு தமிழகத்தில் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்குகிறார். தமிழர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா ? 

ஒரு மாதத்திற்கு முன்பு தான் 20 தமிழர்களை ஆந்திரா காடுகளில் வைத்து தெலுங்கு காவல்துறை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றது. இந்த கொலைக்கு உத்தரவிட்டது தெலுங்கின வெறியன் சந்திரபாபு நாயுடு என்பது விசாரணையில் தெரியவந்தது. நாயுடுவிற்கு எதிராக தமிழகத்தில் பலத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சென்னையில் இயங்கும் சந்திரபாபு நாயுடுவின் அங்காடி தமிழின உணர்வாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. பல இடங்களில் நாயுடுவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டது. தெலுங்கர்களுக்கு எதிரான குரல் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இப்படியான நிலையில் தான் தமிழகத்தில் சந்திரபாபு நாயுடுவின் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியை தொடங்க உள்ளனர் தமிழகத்தில் வாழும் தெலுங்கர்கள். 

தமிழக மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய தெலுங்கர்கள் தமிழர்களை சுட்டுக் கொன்ற நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் தெலுங்கு தேச கட்சியை தொடங்க முன்வந்திருப்பது மிகப்பெரிய துரோகமாகும். இது தமிழர்களை கேவலப்படுத்தி தமிழர்களின் முதுகில் குத்தும் செயலாகும். இத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டில் எல்லா நன்மைகளையும் பெற்று , ஆட்சி அதிகாரத்தையும் பெற்று , வீடு வசதி நிலங்களை எல்லாம் பெற்று வாழும் தெலுங்கர்கள் தமிழர்களுக்கு ஆதரவாக நிற்பதை விட்டு விட்டு தமிழர்களை கொன்ற தெலுங்கின வெறியன் சந்திரபாபுபிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர் . 
ஏற்கனவே தமிழர்களை திராவிடம் என்ற போர்வையில் தெலுங்கர்கள் தான் ஆட்சி செய்து வருகின்றனர் . இப்போது திராவிடத்தின் சாயம் வெளுத்துள்ள நிலையில் நேரடியாக ஆந்திர தெலுங்கு கட்சியை இங்கு பலப்படுத்த திட்டமிட்டு உள்ளனர் தெலுங்கர்கள். தமிழகத்தில் தெலுங்கு தேசத்திற்கு என்ன வேலை? தமிழகத்தில் இவர்கள் தெலுங்கு தேசத்தை கட்டி எழுப்ப போகிறார்களா? இப்படியான கட்சி இங்கு வேரூன்றினால் நாளை கன்னட தேசக் கட்சி, மலையாள தேசக் கட்சி , இந்தி தேசக் கட்சி என பல கட்சிகளை தொடங்கி தமிழகத்தை வேற்றின மக்கள் பங்கு போட்டுக் கொள்வார்கள். தமிழக  அரசை வேற்றின மக்களே வழிநடத்துவார்கள். திராவிட அரசியலால் தமிழகத்தில் இதுவரை தமிழ்த் தேசக் கட்சியே நிலைபெற முடியவில்லை . ஆனால் தெலுங்கு தேசக் கட்சி நிலைபெற துடிக்கிறது. தமிழர்கள் தங்களை தமிழர்களாக உணரத் தொடங்கி விட்டார்கள் என்பதை தெலுங்கர்கள் உணரத் தொடங்கிவிட்டனர் என்பதை தான் இந்நிகழ்வுகள் நமக்கு காட்டுகிறது. 

எதுவாகினும், சந்திரபாபுவின் கட்சிக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை தமிழர்கள் நாம் உரக்கச் சொல்ல வேண்டும். திராவிடர்கள் இது குறித்து வாய் திறக்க மாட்டார்கள். தமிழர்கள் தான் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். தமிழர்களை இனவாதிகளாக சித்தரிக்கும் இன எதிரிகளுக்கு நமது செய்தியை சொல்ல வேண்டும். தெலுங்கின வெறியன் சந்திரபாபு நாயுடுவிற்கும், அவனது கட்சிக்கும் தமிழகத்தில் இடமில்லை என்பதை தமிழர்கள் நாம் உறுதி செய்வோம். நேரிலும், இணைய வெளியிலும் நமது கடும் எதிர்ப்பை பதிவு செய்வோம்.  






[vuukle-powerbar-top]

Recent Post