Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஒவ்வொரு முறையும் ஏமாற்றப்படுகிறான் தமிழன் !! 

ஆந்திராவில் இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்பு தமிழகம் முழுவதும் பரவலாக போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசையும் இந்திய அரசையும் கண்டித்து முழக்கங்கள் முன்வைக்கப்பட்டது. மக்கள் மட்டும் கடுமையாக போராடிக் கொண்டிருக்க இந்திய அரசும் தமிழக அரசும் செவிடன் காதில் ஊதிய சங்கை போல எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது . மனித உரிமை ஆணையவும் , நீதிமன்றமும் தான் சில நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

இந்தியாவை நம்பினோம் அடிமையானோம், திராவிடத்தை நம்பினோம் ஏமாளி ஆனோம் என்ற வாசகம் உண்மையில் மிகப் பொருத்தமாக உள்ளது. வேறு நாட்டில் மனிதர்கள் இறந்தால் இரங்கல் தெரிவிக்கும் இந்திய அரசு சொந்த நாட்டில் தமிழர்கள் கொல்லப்பட்டால் சிறிய வருத்தம் கூட தெரிவிப்பதில்லை. இருபது தமிழர்கள் படுகொலைக்கு நடுவண் புலனாய்வு குழு விசாரிக்காது என்று திமிராக பதில் சொல்கிறார் பாஜக அரசு. கேரளா கடல் எல்லையில் மீனவர்கள் கொல்லப்பட்டால் உடனே இத்தாலி கடல் மாலுமிகளை கைது செய்தது கேரளா அரசு . ஆனால் தமிழகத்தை ஆளும் திராவிட அரசுகள் யார் தமிழனைக் கொன்றாலும் இந்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதுகிறது. இப்படியான அவல நிலை எப்போது நீக்கும்? 

தமிழர்களுக்கான அரசும் தமிழகத்தில் இல்லை . தமிழர் பிரச்சனையை பாராளுமன்றத்தில் வலியுறுத்தும் பா.ம உறுப்பினர்களும் தமிழகத்திற்கு இல்லை. கர்நாடக முதல்வர் அவருடை மாநிலத்தை சேர்ந்த அனைத்து அமைச்சர்கள் , பா.ம உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு மோடியை சந்தித்து தன்னுடைய மாநில சிக்கலுக்கு தீர்வு காண முயல்கிறார். கன்னட வழிக் கல்வியை கட்டாயப்படுத்த நடுவண் அரசு உதவி செய்ய வேண்டும் என்கிறார். ஆனால் தமிழகத்திலோ இருக்கும் தமிழ் வழிக் கல்விக்கும் மூடுவிழா காண்கிறது அதிமுக அரசு.  திமுக விற்கு மட்டும் பதில் சொல்லும் நிலையில் அதிமுகவும், அதிமுகவிற்கு மட்டும் பதில் சொல்லும் நிலையில் திமுகவும் உள்ளது . இவ்விரு திராவிடக் கட்சிகளும் தமிழகத்தை அதிகாரமில்லாத மாநிலமாக மாற்றியது மட்டுமில்லாமல் தமிழகத்திற்கு பெரும் களங்கத்தையும் ஏற்படுத்தி உள்ளனர் . 

இந்தியதால் தேய்ந்து திராவிடத்தால் தமிழகம் படுகுழியில் வீழ்ந்துள்ளது என்பது மட்டும் உண்மையாகவே உள்ளது. இந்தியாவில் தமிழகம் தன்னாட்சி பொருத்திய அதிகாரமிக்க மாநிலமாக மாற்றவும், உலகத் தமிழர்களை பாதுகாக்கும் ஒரு பலமான அரசாக தமிழகம் விளங்கிடவும் தமிழர்கள் தான் திராவிடக் கட்சிகளை அரியணை ஏற்றக் கூடாது. தமிழக நலனில் முழு அக்கறையுள்ள தமிழர் கட்சிகளே தமிழகத்தை ஆளும் வகை செய்தல் வேண்டும். தமிழ்த் தேசிய கட்சிகளுக்கே நம் வாக்கு என்பதை தமிழக மக்கள் உறுதி செய்தல் வேண்டும். இந்திய தேசிய, திராவிட, பொதுவுடைமை கட்சிகளை தமிழ்கள் நாம் புறக்கணிப்போம். தமிழர்களின் குரலாக தமிழர்களை ஒன்றிணைக்கும் , தமிழையும் தமிழர்களையும் பாதுகாக்கும் தமிழ்த் தேசிய அரசியலை தமிழகத்தில் உருவாக்குவோம். 


தமிழ்த் தேசியம் என்பது மோசடியானது. அது தமிழ்ச் சாதிகளுக்கானது. அது சாதி தேசியம். அது ஒருபோதும் சாத்தியமில்லை - அண்ணன் கிருட்டிணசாமி. 

எக்காலத்திற்கும் தமிழ்ச் சாதிகள்  திராவிட தெலுங்கர்களுக்கு அடிமையாகவே  இருக்க வேண்டும். தமிழ்ச் சாதிகள் ஒன்றிணையவே கூடாது என்று சொல்கிறார் அண்ணன் கிருட்டிணசாமி. இவரை போன்ற திராவிட அடிமைகள் தமிழ்த் தேசியத்திற்கு தடைக்கல் தான். 

கருணாநிதியை திட்டும் போது திராவிடர்கள் பிரிந்து போய்விடுவார்கள். ஈவேராவை திட்டும் போது திராவிடர்கள் ஒன்றாகி விடுவார்கள். 

திராவிடர்கள் கவனிக்கவும்.  

இக்காலத்து ஈவேரா தான் கருணாநிதி. அக்காலத்து கருணாநிதி தான் ஈவேரா. ஈவராவையும் திராவிட அமைப்புகளையும் தமிழகத்தில் காப்பாற்ற வேண்டுமெனில் அது கருணாநிதியால் மட்டும் தான் முடியும். அதனால் திமுகவை ஆட்சியில் அமர்த்த ஈவேரா பக்தர்கள் பாடுபடுவீர்களா? 


  





[vuukle-powerbar-top]

Recent Post