Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முதல் அமைச்சர் விக்னேசுவரன் தலைமையில் ஈழத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். தமிழகத்தில் இப்படி நடக்காதது ஏன் ? 

மே 18 தமிழினப் படுகொலை நாளில் தமிழகமெங்கும் கொல்லப்பட்ட ஈழத்து உறவுகளுக்காக நினைவஞ்சலி கூட்டங்கள் நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ்த் தேசியத்தின் எழுச்சியாக பல தமிழ் அமைப்புகள் ஆங்காங்கே நினைவஞ்சலி கூட்டங்கள் நடத்தின. இது 2009 போருக்கு பின்னர் தமிழர்களுக்கு ஏற்பட்ட இன உணர்வின் அடிப்படையில் உருவானது. தமிழகத்தில் தமிழர்கள் நினைவஞ்சலி கூட்டங்கள் நடத்த எந்த விதமான தடையும் இல்லை. ஆனால் சிங்கள அரசால் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஈழ மண்ணில் நினைவேந்தல் செலுத்த தடை உள்ளது. இத்தனை ஆண்டுகள் சிங்கள அரசு தமிழர்களின் படுகொலைக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்தக் கூட உரிமையை மறுத்து வருகிறது. இம்முறை ஈழத் தமிழர்கள் எல்லா தடைகளையும் அச்சுறுத்தல்களையும் மீறி இனப்படுகொலை நாளில் நினைவஞ்சலி செலுத்தி உள்ளனர். இந்த நிகழ்வை வடமாகான முதல்வர் விக்னேசுவரன் அவர்களே சுடரேற்றி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்பாணம், முள்ளிவாய்க்கள், புதுக்குடியிருப்பு, திரிகோணமலை என பல ஈழப் பகுதிகளிலும் இந்த ஆண்டு இனப்படுகொலை நாள் அனுசரிக்கப்பட்டது என்பதும் கவனிக்கத் தக்கது. 

ஈழத்தில் ஒரு முதல் அமைச்சர் தலைமையில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் ஒட்டுமொத்த தமிழர்களின் தாயகமாக விளங்கும் தமிழகத்தில் தமிழக முதல்வர் ஒரு இந்த நாளில் ஒரு துக்க அறிக்கை கூட வெளியிடவில்லை. எந்த ஒரு நினைவேந்தல் நிகழ்விலும் கலந்து கொள்ளவும். நியாயமாக தமிழக அரசே முன்னின்று இனப்படுகொலை நாளை நினைவு கூர்ந்திருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தை ஆள்வது தமிழர் அல்லாதவர்கள் என்பதால் ஒவ்வொரு தமிழினம் சார்ந்த நிகழ்வுகளும் தமிழக அரசால் புறக்கணிக்கப்படுகிறது. தமிழீழத்திற்கு தனி நாடு எவ்வளவு தேவையோ அதை விட அதிக அளவு தமிழகத்திற்கு தமிழர் ஆட்சி தேவைப்படுகிறது என்பதையே இந்நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது. 

[vuukle-powerbar-top]

Recent Post