Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வித்யாவின் படுகொலை அதன் பின்னரான போராட்டங்கள் ஈழத் தமிழர்களின் செய்தியாக  உலக நாடுகளுக்கு உணவர்த்துவது என்ன ?

ஈழத்தில் பள்ளி மாணவி வித்யா கடத்தி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி ஈழத் தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவரும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இப்படியான போராட்டம்  2009 பின் இப்போது தான் முதல் முறையாக நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈழத்தில் இதற்கு முன்னரும் பல பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டிருந்தாலும், வித்யாவின் கொலையை ஈழத் தமிழர்கள் அவ்வளவு எளிதாக கடந்து செல்லவில்லை. இம்முறை பலமான போராட்டங்களை முன்னெடுத்து உள்ளனர். காவல்துறை, இராணுவத்தினர் அச்சுறுத்தல்களை மீறி இம்முறை போராட்டம் வெடித்துள்ளது. அதிகாரமில்லாத தமிழர் அரசு ஈழத்தில் இருந்தும் எந்தவிதமான பயனும் இல்லை என்பதை இனியாவது உலக நாடுகளும் இந்தியாவும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர் பகுதிக்கு இன்னும் தமிழர் காவல்படை அங்கு இல்லை என்பதும், சிங்கள ராணுவத்தின் அடக்குமுறை அங்கு இன்னும் தொடர்கிறது என்ற செய்தியும் தான் வித்யாவின் மரணம் மீண்டும் உலக நாடுகளுக்கு உணர்த்துகிறது

இதுவரை சிங்களர்கள் தான் தமிழ்ப் பெண்களை வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளனர் . இந்த முறை பணபலம் மிக்க தமிழர்கள் சிலரே வித்யாவின் படுகொலைக்கு காரணமாக அமைத்துள்ளது வேதனையின் உச்சம். யாராக இருந்தாலும் நீதி நிலைநாட்டப் பட வேண்டும் என்று ஈழத்தில் உள்ள எல்லா பகுதிகளிலும் தமிழர்கள் போராட்டம் நடத்திக் கொண்டு வருகிறார்கள். புலிகள் இருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா என்ற கேள்வியை கேட்டுள்ளனர் மாணவர்கள். உண்மை தான் புலிகள் அரசு இருந்திருந்தால் இப்படியான கொடும் செயல்கள் செய்ய எவரும் அஞ்சுவர். பாதகர்களுக்கு கடுமையான தண்டனையை புலிகள் அரசு உடனக்குடன் வழங்கியும் உள்ளது. ஆனால் சிங்கள ஆட்சியில் குற்றவாளிகள் தப்பிக்க, காப்பாற்றப்பட  நிறைய வழிகள் உள்ளதே தவிர குற்றவாளிகளை பிடிப்பதற்கு சிங்கள அரசு உடனே நடவடிக்கை எடுக்காது. ஏறத்தாள இந்திய அரசை போலவே தான் சிங்கள அரசும் தமிழர் விடயத்தில் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கிறது . தமிழர்களுக்கான நீதி இந்தியாவிலும் கிடைக்கவில்லை இலங்கையிலும் கிடைக்கவில்லை. தமிழர்களுக்கான அதிகாரமிக்க தன்னாட்சி கொண்ட அரசு மட்டும் தான் ஈழத்திலும் தமிழகத்திலும் தமிழர்களை காப்பாற்றும் என்பது தான் கடந்த காலங்கள் உணர்த்துகிறது. ஈழத்தை பொறுத்தவரை புலிகள் ஆட்சியைத் தான் தமிழர்கள் இன்னும் விரும்புகிறார்கள். தனி ஈழம் அமையும் வரையிலாவது அங்கு தமிழர்களுக்கு குறைந்தபட்ச காவல்துறை அதிகாரங்கள் கிடைக்க வேண்டும். அதற்கு இந்தியாவும், தமிழகமும், உலக நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும். இதுவரை தமிழக அரசியல் தலைவர்கள் இது குறித்து மௌனமாக இருப்பதும் ஏன் என்று தெரியவில்லை. மௌனம் கலைத்து வித்யாவின் படுகொலைக்கு உடன் விசாரணையும் ஈழத் தமிழர்களுக்கான அதிகாரங்களை பெறுவதற்கும் தமிழக அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.






[vuukle-powerbar-top]

Recent Post