Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆர் கே நகர் இடைத்தேர்தலில் ஏன் ஒரு தமிழ்த் தேசியவாதி போட்டியிடக் கூடாது ?

ஜெயலலிதாவிற்காக நடத்தப்படும் ஆர் கே நகர் இடைத் தேர்தலில் தமிழர் அல்லாத திராவிடரான ஜெயா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து இந்திய தேசியவாதியான டிராபிக் ராமசாமி போட்டியிட உள்ளார். இவர்களால் நம் தமிழ் இனத்திற்கு என்ன பயன் ? இவர்கள் இருவரையும் எதிர்த்து தமிழ்த் தேசிய அரசியலை ஏற்கும் ஒரு தமிழர் ஏன் போட்டியிடக் கூடாது ?

பணம் தான் இந்த தேர்தலை தீர்மானிக்கிறது என்றாலும் திராவிடத்தையும் இந்தியத்தையும் எதிர்த்து தமிழ்த் தேசியம் களமிறங்கிவிட்டது என்ற செய்தியையாவது நாம் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். தமிழர்களுக்கு எத்தனை வாக்குகள் உள்ளன என்பதையும் நாம் அறியலாம். ஒரு சிறிய தொகுதியில் தமிழ்த் தேசியத்திற்கான பரப்புரையை நாம் மேற்கொள்ளலாம். இது குறித்து தமிழர் கட்சிகள் சிந்திக்க வேண்டும். 
[vuukle-powerbar-top]

Recent Post