Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் (ஐ ஐ டி) தமிழ்த் தேசிய மாணவர் படிப்பு வட்டத்தை கட்டாயம்  உருவாக்க வேண்டும்.

இந்திய தொழில் நுட்ப கழகத்தில் தமிழர் அல்லாதவரின் ஆதிக்கம் காலம் காலமாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இங்குள்ள மாணவர்கள் தமிழ்த் தேசியம் சார்ந்த பிரச்சனைகள் எவைக்கும் பொதுவாக குரல் கொடுப்பதும் இல்லை. மாணவர்களின் நடுவே ஆரியர்களுக்கான மாணவர் படிப்பு வட்டம், திராவிடர்களுக்கான படிப்பு வட்டம் , தலித்தியத்திற்கான படிப்பு வட்டம், தீவிர இந்துத்வா படிப்பு வட்டம், விவேகானந்தர் வட்டம், இந்திய மாணவர் வட்டம் என பல்வேறு படிப்பு வட்டங்கள் உள்ளன. ஆனால் இவைகள் எதுவும் தமிழர்களுக்கான படிப்பு வட்டங்கள் அல்ல. தமிழர் அல்லாதவர்களே இந்த படிப்பு வட்டங்களை ஆளுமை செலுத்துகின்றனர். தமிழ் மொழி காப்பு, தமிழர் இன நலன் காப்பு , வேற்றின மக்களின் ஆதிக்கத்தில் இருந்து தமிழர்களை பாதுக்காக்கவும் கட்டாயம் தமிழ்த் தேசிய மாணவர் படிப்பு வட்டத்தை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். எல்லா கல்லூரிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் தமிழ்த் தேசிய அமைப்புகள் தொடங்கப்பட வேண்டும். தொடர்வண்டி துறையில் அறுபது ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு இப்போது தமிழர் ஒன்றியம் உருவாக்கப் பட்டுள்ளது. இதே போலே ஐ ஐ டி வளாகத்திலும்  தமிழியத்தின் அடிப்படையில் தமிழர்கள் ஒன்றிணையவும், இந்தி ஆதிக்கம், இந்திய ஆதிக்கம் , மலையாளிகள் தெலுங்கர்களின் ஆதிக்கத்தையும் எதிர்க்க தமிழ்த் தேசிய மாணவர் படிப்பு வட்டம் உருவாக வேண்டும். ஐ ஐ டி மாணவர்களோ அல்லது வேறு கல்வி நிலையங்களின் மாணவர்களோ தமிழர்களுக்கான படிப்பு வட்டத்தை உருவாக்க முன்வந்தால் அதற்கு நாம் துணை நிற்போம் ஆதரவு தருவோம் என்பதை மாணவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். எல்லா இடங்களிலும் தமிழர் ஒற்றுமை ஒங்க வேண்டும்.

[vuukle-powerbar-top]

Recent Post