Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக காவல்துறையில் தமிழ் இல்லை. மனுவிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு !! 

தமிழக காவல்துறையில் தமிழின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளதை நாம் கவனிக்க இயலும். சென்னை காவல்துறை வாகனங்களில் 'காவல்' என்று கூட தமிழில் எழுதப்படவில்லை. நூற்றுக்கணக்கான சிறிய காவல் மையங்களில் காவல்துறை மின்னணு தகவல் பலகைகளை அமைத்துள்ளது. இவற்றிலும் 'Police' என்று ஆங்கிலத்தில் தான் அறிவிப்பு வெளியிடுகிறது காவல்துறை. மேலும் இந்த மின்னணு தவகல் பலகையின் மூலமாக பல செய்திகளை, முக்கிய அறிவிப்புகளை மக்களுக்கு ஆங்கிலத்தில் வழங்கி வருகிறது சென்னை காவல்துறை. சென்னை காவல்துறை தமிழர்களுக்காக செயல்படுகிறதா அல்லது ஆங்கிலேயர்களுக்காக செயல்படுகிறதா என்று எண்ணும் அளவிற்கு ஆங்கிலத்தை பயன்படுத்துகிறது தமிழக காவல் துறை. 

இது குறித்து நாம் தமிழக தலைமை காவல்துறை இயக்குனரிடம் நேரடியாக சென்று மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. பின்னர் நேரடியாக தமிழக அரசுக்கு மனு கொடுத்தோம். தமிழக அரசோ, நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்து மனுவை கிடப்பில் போட்டுவிட்டது. அடுத்த கட்டமாக தமிழக ஆளுநரிடம் தான் நாம் மனு கொடுக்க வேண்டும் . அதையும் விரைவில் செய்ய உள்ளோம். 

ஐம்பது ஆண்டுகால திராவிட ஆட்சியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக தமிழும் அழிந்து தமிழனும் அழிந்தான் என்பது மட்டும் மெய்யாகி உள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழக அரசு நிறுவனங்களில் கூட தமிழை நாம் தேட வேண்டிய நிலை விரைவில் வரும் என்பதில் ஐயமில்லை. தமிழையும் தமிழர்களையும் வாழவைக்க முடியாத திராவிட அரசுகள் பதவி விலகட்டும். உணர்வுள்ள தமிழர்களே தமிழகத்தை ஆளட்டும். 
[vuukle-powerbar-top]

Recent Post